இம்மாநாடு கருத்தரங்கம், சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று சிறப்புக் கூறுகளைக் கொண்ட முழு அளவிலான தமிழ் இணைய மாநாடாக உத்தமம் 2010 இருக்கும். தமிழ் கணியம், பொதுவான தமிழ் இணையம் ஆகியவற்றின் அண்மைக்கால முன்னேற்றங்கள், சவால்கள் குறித்து முழுமையாக ஆராயும் தொழில்நுட்பக் குழுவாக மாநாட்டு அரங்குகள் இருக்கும். உலக அளவிலான தமிழ் இணையத் தொழில் நுட்ப வல்லுனர்களும், ஆய்வறிஞர்களும், கணினி மற்றும் இணையத் திறனுடையவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டுக் குழுக்கள்
தமிழ் இணைய மாநாட்டுக்குத் தமிழக அரசினால் உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவும், உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) நிகழ்ச்சிக் குழு, பன்னாட்டுக் குழு என்கிற இரண்டு குழுக்களையும் அமைத்துள்ளன.