ஒய். என். சுக்தாங்கர்
யஷ்வந்த் நாராயண் சுக்தங்கர், (இந்தியப் பேரரசின் ஒழுங்கு) (1897 – ?) ஒரு இந்திய அரசு ஊழியர் ஆவார். இந்தியாவின் இரண்டாவது அமைச்சரவை செயலாளராகவும் ஒடிசாவின் முன்னாள் ஆளுநராகவும் இருந்தார். தொழில்இவர் 1921இல் இந்தியாவின் சொந்த அலுவலர் தொகுதியின் இந்தியக் குடிமைப் பணியில் உறுப்பினராக இருந்தார். அவர் இரண்டாம் உலகப் போரின்போது இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு அரசு ஊழியர்களைக் கொண்ட நிதி மற்றும் வணிகக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். இவர், பண்ணாட்டு வணிகத்தில் நிபுணராகவும் இருந்தார். மேலும் இவர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தில் செயலாளராகவும்,[1][2] இந்திய அமைச்சரவைச் செயலாளராகவும் 1953 மே 14 முதல் 1957 சூலை 31 வரை பணியாற்றினார்.[3] இந்தியாவின் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்த இந்திய திட்ட ஆணையத்தின் செயலாளராகவும் பணியாற்றினார்.[4] ஆளுநர்அமைச்சரவை செயலாளராக ஓய்வு பெற்ற பின்னர், இவர் ஒடிசாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் 1957 சூலை 31 முதல் 1962 செப்டம்பர் 15 வரை பணியாற்றினார்.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia