ஒரே ரத்தம்
ஓரே ரத்தம் (Ore Raththam [3] என்பது 1987 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இப்படத்தை சொர்ணம் இயக்க, மு. கருணாநிதி எழுதியுள்ளார். இப்படத்தில் கார்த்திக், பாக்யலட்சுமி, மாதுரி, கிஷ்மு, மனோரமா, பாண்டியன், சீதா, மு. க. ஸ்டாலின், ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர். இது குங்குமம் இதழில் கருணாநிதி தொடர்கதையாக எழுதி வெளிவந்த கதையை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் எடுக்கபட்ட படமாகும். நடிகர்கள்
தயாரிப்புஒரே ரத்தம் என்பது குங்குமம் இதழில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு கதை ஆகும். இதை மு. கருணாநிதி எழுதினார். அதை அதே பெயரில் திரைப்படமாக முரசு மூவிஸ் நிறுவனம் சார்பில் எம். சூரியநாராயணன் தயாரித்துள்ளார். மு. க. ஸ்டாலின் இந்த படத்தின் மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார். பின்னணி இசைபடத்திற்கான இசையை தேவேந்திரன் மேற்கொண்டார்.[6]
வெளியீடும், வரவேற்பும்ஒரே ரத்தம் 8 மே 1987 அன்று வெளியிடப்பட்டது.[1] தி இந்தியன் எக்ஸ்பிரஸின் என். கிருஷ்ணசாமி இந்தப் படத்தின் கதை, உரையாடல், பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றை பாராட்டினார். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia