ஓம் பிரகாசு ராஜ்பர்
ஓம் பிரகாசு ராஜ்பர் (Om Prakash Rajbhar)(பிறப்பு 15 செப்டம்பர் 1962) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சியின் தலைவர் ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் ஜஹூராபாத் தொகுதியிலிருந்து 17வது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் ஏக்தா மன்ச் கூட்டணியின் தலைவர் ஆவர். ஆரம்ப கால வாழ்க்கைராஜ்பர், சன்னு ராஜ்பருக்கு மகனாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள பலியா மாவட்டத்தின் ராஸ்ரா தொகுதியில் உள்ள ராம்பூர் கிராமத்தில் பிறந்தார். இவர் 1983-ல் வாரணாசியில் உள்ள படகானில் உள்ள பல்தேவ் பட்டப்படிப்புக் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவர் விவசாய தொழிலில் செய்பவர் ஆவார்.[1] அரசியல் வாழ்க்கைராஜ்பர் உத்தரப்பிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2017 முதல், இவர் ஜஹூராபாத் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்[1] ராஜ்பார், 19 மார்ச் 2017 அன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் பதவியேற்றார். ஆனால் மே 20, 2019 அன்று, கூட்டணிக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையிலிருந்து ராஜ்பார் நீக்கப்பட்டார்.[3][4] தி வயர் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், தான் ஒரு இந்து அல்ல என்று தெரிவித்தார்.[5] வகித்த பதவிகள்
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia