வாரணாசி என்ற பெயர் இந்நகருக்கு சூட்ட காரணமாக வருணா ஆறும், அசி ஆறும் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் பாய்ந்து பின் இந்நகரில் கங்கை ஆற்றில் ஒன்று கூடுவதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது.
ரிக் வேதத்தில் இந்நகரை அறிவு தரத்தக்க, ஒளி பொருந்திய நகரம் என்ற பொருளில் காசி என குறிப்பிட்டுள்ளது.[5]ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில், மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு இணையாகாது என சிவபெருமான் காசியின் பெருமையை கூறுகிறார்.[6]
சமசுகிருத மொழியில் காசி எனில் ஒளி பொருந்திய நகர் என மொழிபெயர்ப்பு செய்யலாம்.[7]
வரலாறு
கங்கைச் சமவெளியில் அமைந்த வாரணாசி நகரம் இந்துக்களின் வேதங்கள் மற்றும் வேதாந்தம் ஆகியவற்றுக்கு 11-வது நூற்றாண்டு முதல் இருப்பிடமாக அமைந்துள்ளது.[8] வாரணாசி நகரில் மக்கள் வேதகாலத்திலிருந்து தொடர்ந்து பல்லாண்டுகளாக வசித்து வருகின்றனர் என்பதை வாரணாசிக்கு அருகில் உள்ள அக்தா (Aktha) மற்றும் ராம்நகரை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் இந்நகரில் மக்கள் பொ.ஊ.மு. 1800-ஆம் ஆண்டிலிருந்தே வாழ்ந்து வந்ததை உறுதிப்படுத்துகின்றனர்.[9]
மஸ்லின் பருத்தி துணிகள், பட்டுத் துணிகள், வாசனை திரவியங்கள், யானையின் தந்த சிற்பங்கள், சிற்பக்கலை ஆகியவற்றுக்கு புகழ் பெற்ற நகராகும் வாரணாசி.[13]
காசி நாட்டின் தலைநகராக விளங்கிய வாரணாசியில் கௌதம புத்தர் பல ஆண்டுகள் கடும் தவமியற்றி, பின் ஞானம் அடைந்த பின், வாரணாசிக்கு அருகில் உள்ள சாரநாத்தில் தன் சீடர்களுக்கு தர்மத்தை போதித்தார்.[14][15]
பொ.ஊ.மு. 635-இல் வாரணாசி வந்த சீன யாத்திரிகரும் வரலாற்று அறிஞருமான யுவான் சுவாங், கங்கைக் கரையில் 5 கி.மீ. நீளத்தில் இருந்த வாரணாசியில் செழித்திருந்த சமயம் மற்றும் கலைநயங்கள் குறித்து பெருமையுடன் தனது பயண நூலில் குறித்துள்ளார்.[13][16]
மகதப் பேரரசு காலத்தில் வாரணாசி நகரம் தட்சசீலத்திற்கும் பாடலிபுத்திர நகருக்கும் சாலை வழி போக்குவரத்தாக இருந்தது.
1194ஆம் ஆண்டில் துருக்கிய இசுலாமிய ஆட்சியாளர், வாரணாசி நகரத்திலிருந்த ஆயிரக்கணக்கான கோயில்களை இடிக்க ஆணையிட்டார்.[18][19]
இசுலாமியர் ஆட்சிக் காலத்தில் வாரணாசி நகரம் மூன்று நூற்றாண்டுகளாக பொழிவிழந்து காணப்பட்டது.[16] இந்தியாவை ஆப்கானியர்கள் ஊடுருவிய காலத்தில் வாரணாசியில் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் எழுப்பப்பட்டன.[17]
1376-இல் பெரோஸ் ஷா என்ற இசுலாமிய மன்னர் வாரணாசியில் உள்ள கோயில்களை மீண்டும் இடிக்க ஆணையிட்டார். 1496-இல் ஆப்கானிய ஆட்சியாளர் சிக்கந்தர் லோடி வாரணாசியில் உள்ள இந்துக்களை ஒடுக்கவும், கோயில்களை இடிக்கவும் ஆணையிட்டார்.[18] இருப்பினும் வாரணாசி தொடர்ந்து இந்துக்களின் ஆன்மிகம் மற்றும் கலைகளின் தாயகமாகவே விளங்கியது.
கபீர்தாசரும், 15-ஆம் நூற்றாண்டின் கவிஞர் சமூக சீர்திருத்தவாதி சாது ரவி தாஸும் வாரணாசியில் பிறந்து வளர்ந்தவர்கள். சீக்கிய மத நிறுவனர் குருநானக் 1507-இல் வாரணாசியில் சிவராத்திரி விழாவினைக் காண வந்தார்.[20] இராமாயணம் இயற்றிய துளசிதாசர் இங்கு வாழ்ந்தவர்.
புனித நகருக்கு மாலையிட்டு வணங்கும் வேதியர். ஓவியம் ஜேம்ஸ் பிரின்ஸ்செப், 1832.
மொகலாய மன்னர் அக்பர், வாரணாசியில் சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு இரண்டு கோயில்களை எழுப்பினார்.[16][18] புனே மன்னர் அன்னபூரணி கோயிலையும், அக்பரி பாலத்தையும் கட்டித்தந்தார்.[21] இந்நகருக்கு புனித பயணம் மேற்கொள்வோரின் (யாத்திரீகர்களின்) வருகை 16-ஆம் நூற்றாண்டு வாக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.[22]
1656-ஆம் ஆண்டில் அவுரங்கசீப் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பல கோயில்களையும் இடிக்க உத்தரவிட்டார்.[சான்று தேவை]ஔரங்கசீப், இந்துக்கள் காசி நகரில் நுழைவதற்கும் கங்கையில் நீராடுவதற்கும் ஜிஸியா என்ற வரி விதித்தார்.[சான்று தேவை] ஒளரங்கசீப் மகன் மூரத் பட்டத்திற்கு வந்தபின் பணத்தேவைக்காக ’ஜிஸியா’ வரியை அதிகமாகப் பெறுவதற்காக, கங்கையில் நீராடும் ஒவ்வொரு முறையும் ’ஜிஸியா’ வரி கட்ட வேண்டும் என்று ஆணையிட்டார்.[23]
ஔரங்கசீப் மறைவிற்குப்பின், வாரணாசியில் மராத்திய மன்னர்கள், 18-ஆம் நூற்றாண்டில் மீண்டும் புதிய கோயில்களைக் கட்டினர்.[24] மொகலாயர்கள் 1737 முதல் காசி நாட்டை அலுவலக முறையில் அங்கீகாரம் அளித்தனர். பிரித்தானிய இந்திய அரசும் அவ்வங்கீகாரத்தை தொடர்ந்து ஏற்றுக் கொண்டது.
காஷியைச் சேர்ந்த ராஜா சைத் சிங்
நகர வளர்ச்சியின் பொருட்டு 1867-இல் வாரணாசி நகராட்சி மன்றம் துவங்கியது.
தச அஷ்வமேத படித்துறை அருகே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிவலிங்கத்திற்கு கங்கை நீரால் அபிசேகம் செய்வது மிகவும் சிறப்பாகும். இக்கோயிலில் உள்ள அன்னபூரணி சன்னிதானம் சிறப்பு பெற்றது. இக்கோயில் 1785-இல் இந்தோர் இராச்சியத்தின் ராணி அகல்யாபாயினால் புதிதாக கட்டப்பட்டது. இக்கோயிலின் உயரம் 51 அடியாகும்.1835-ஆம் ஆண்டில் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் கோவில் கோபுரத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்த 1000 கிலோ தங்கத்தினை அளித்திருக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் புகழ் பெற்றது. சிவலிங்கத்திற்கு காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் அபிசேகத்துடன் பூசைகள் நடத்தப்பெறுகின்றன.
காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் வலப்புறம் அன்னபூர்ணா கோயில் அமைந்துள்ளது.
சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இதனால் இந்திரன் தனது பதவி பறிபோய்விடும் எனப் பயந்து அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். ஆனால் முனிவரின் கோபப்பார்வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முத்தி அடைய வில்லை. அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை, ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பின் பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும்.
காசியின் கங்கைக்கரையில், தினமும் சூரியன் மறைவுக்குப்பின் கங்கைக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்பெறுவது கண்கொள்ளாக்காட்சியாகும். இந்நிகழ்வை கங்கா ஆரத்தி என்கின்றனர்.
படித்துறைகள்
கங்கை ஆற்றிலிருந்து வாரணாசி படித்துறைகள்
வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றில் 87க்கும் மேற்பட்ட படித்துறைகள் இருந்த போதும், பார்க்க வேண்டிய முக்கிய மூன்று படித்துறைகள்;
இரயில்கள் பல முக்கிய இந்திய நகரங்களை வாரணாசி நகரம் இணைக்கிறது.[27] சென்னையிலிருந்து ஆறு இரயில்கள் வாரணாசிக்கு செல்கிறது.[28] வாரணாசியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள முக்கிய இரயில் நிலையமான முகல்சராய் வழியாக வாரணாசிக்கு கூடுதலான இரயில்கள் செல்கிறது.
வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பேரூந்துகள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வாடகை கார்கள், ஆட்டோ ரிக்சா மற்றும் கைரிக்ஷாக்கள் உள்ளூர் போக்குவரத்திற்கு எளிதாக கிடைக்கிறது.
Distribution of religions
†Includes சீக்கியம்s (0.2%), பௌத்தம் (<0.2%).
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வாரணாசி மக்கள் தொகை 1,435,113 ஆகும். அதில் ஆண்கள் 761,060 மற்றும் பெண்கள் 674,053 ஆகும்.[36] 1000 ஆண்களுக்கு 883 பெண்கள் என்ற அளவில் பாலினவிகிதம் உள்ளது. எழுத்தறிவு விகிதம் 77%ஆக உள்ளது. வாரணாசியில் இந்துக்கள், இசுலாமியர்கள், சமணர்கள் அதிகம் வாழ்கின்றனர்.
↑Ministry of Tourism, Government of India(March 2007). "Varanasi – Explore India Millennium Year". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 5 March 2007.
↑Eck 1982, ப. 10, 58, refers to "Banares — which Hindus call Kashi, the City of Light" (p. 10) and "Hindus call it Kashi, the luminous City of Light" (p. 58)..
↑குமுதம் ஜோதிடம்; 11. சனவரி 2013 (ஆதாரம்: 1. Fight For the Indian Empire; Dr.Majumdhaar; 2.Ancient and Medieval History of India; Dr.Sathiyanatha Iyer.)
↑"Varanasi". Indian Meteorology Department. Archived from the original on 9 ஜூலை 2012. Retrieved 22 December 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help), precipitation data from Indian Meteorology Department
Singh, Ram Bali (1975). Rajput Clan-settlements in Varanasi District. National Geographical Society of India. கணினி நூலகம்4702795. {{cite book}}: Invalid |ref=harv (help)
Singh; Rana, Pravin S. (2002). Banaras region: a spiritual & cultural guide. Indica Books. ISBN9788186569245. {{cite book}}: Invalid |ref=harv (help)
Wood, Jolie M.F. (2011). "Contentious politics and civil society in Varanasi". Re-framing Democracy and Agency at India: Interrogating Political Society. Ed. Ajay Gudavarthy. Anthem Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-85728-350-4.