ஓர்முசு நீரிணை
![]() ![]() ![]() ஓர்முசு நீரிணை (ஹோர்முஸ் நீரிணை, Straits of Hormuz) தென்கிழக்கில் ஓமான் குடாவையும், தென்மேற்கில் பாரசீகக் குடாவையும் கொண்டு அமைந்துள்ள ஒரு குறுகலான கடற் பரப்பாகும். இதன் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு அமீரகமும், ஓமானின் ஒரு பகுதியான முசாந்தமும் அமைந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் ஹோர்முஸ் தீவும் அமைந்துள்ளது. இந் நீரிணையின் மிக ஒடுங்கிய பகுதி 21 மைல்கள் அகலம் கொண்டது. இதிலே, ஒன்றிலிருந்து ஒன்று 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள, ஒவ்வொன்றும் ஒரு மைல் அகலம் கொண்ட, இரண்டு கால்வாய்கள் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன. பாரசீகக் குடாவைச் சுற்றியுள்ள, பெட்ரோலிய உற்பத்தி நாடுகள், திறந்த கடற்பகுதியை அடைவதற்கான ஒரே வழி இதுவே. உலகில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் 20% இந் நீரிணையூடாகவே கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை இந் நீரிணை, இராணுவ முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகும். 2012இல் ஈரான் அணு உலைக்கு எதிராக அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதை அடுத்து இந்த வழியே செல்லும் எண்ணெய் கப்பல்களை மறிப்போம் என்று ஈரான் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இவ்வழியே ஏற்றுமதியாகும் எண்ணெய் வியாபாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஈரான் எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பதற்கு எதிராக அரேபிய தீபகற்பத்தின் கச்சா எண்ணெய்களை உலகிற்கு எடுத்து செல்லும் முக்கிய வழியான ஓர்முசு நீரிணையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர் கையெழுத்துயிட்டனர்.[1][2] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia