கங்காபூர் நகரம்
கங்காபூர் நகரம் (Gangapur City), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக நிறுவப்பட்ட கங்காபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இராஜஸ்தானில் கிழக்கில் அமைந்த இந்நகரம், ஜெய்ப்பூருக்கு தென்கிழக்கே 133 கிலோ மீட்டர் தொலைவிலும்; மதுரா மற்றும் ஆக்ராவிற்கு தென்மேற்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலு உள்ளது மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கங்காபூர் நகர நகராட்சி 40 வார்டுகளும்; 21,068 வீடுகளும் கொண்ட கங்காபூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,19,090 ஆகும். அதில் ஆண்கள் 62,829 மற்றும் பெண்கள் 56,261 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.12 %. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 16.00 % மற்றும் 5.79 % ஆக உள்ளனர். உள்ளூர் மக்கள் இந்தி, பிராஜ் மொழி, துந்தாரி மொழி மற்றும் இராசத்தானி மொழிகள் பேசுகின்றனர்.இதன் மக்கள்தொகையில் இந்துக்கள் 71.91%, இசுலாமியர் 26.32%, சமணர்கள் 0.98% மற்றும் பிறர் 0.27% ஆக உள்ளனர்.[1] போக்குவரத்து![]() மும்பை-ஜெய்ப்பூர்-தில்லி செல்லும் தொடருந்துகள் கங்காபூர் நகர தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது.[2] தட்ப வெப்பம்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia