கங்காபூர் மாவட்டம்
கங்காபூர் சிட்டி மாவட்டம் (Gangapur district)இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலி மாவட்டம் & சவாய் மாதோபூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று நிறுவப்பட்ட புதிய மாவட்டம் ஆகும்.[1][2]இதன் தலைமையிட நகரம் கங்காபூர் நகரம் ஆகும். இது பரத்பூர் வருவாய் கோட்டத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகம்கங்காபூர் சிட்டி மாவட்டம் 7 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]
மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டததின் மக்கள் தொகை 9,20,340 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 875 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,92,321 (20.90%) மற்றும் 2,26,406 (24.60%) ஆக உள்ளனர்.[4][5]இந்துக்கள் 91.17%, இசுலாமியர் 8.36% மற்றும் பிறர் 00.47% ஆக உள்ளனர்.[6]இந்தி மொழி & இராஜஸ்தானி மொழியை 97.67%, உருது மொழியை 1.61% மற்றும் பிற மொழிகளை 0.72% பேசுகின்றனர். இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia