கஜேந்திரா
கஜேந்திரா (Gajendra) திரைப்படம் 2004-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இத்திரைப்படத்தில் விஜயகாந்த், பிலோரா, லயா, சரத் பாபு, நவாப் ஷா, சீதா, ராஜீவ், ராதா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். சிம்ஹத்ரி என்ற தெலுங்கு படத்தை தழுவி எடுக்கப்பட்டது. பின்னர், ரிட்டர்ன் ஆப் குதா கவாஹ் என்ற பெயரில் இந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்தது. நடிகர்கள்
கதைச்சுருக்கம்அனாதையான கஜேந்திராவை (விஜயகாந்த்) அழகர்சாமி (சரத் பாபு) தத்தெடுத்து தனது மகன் போல் வளர்த்து வருகிறார். அழகர்சாமியின் பேத்தி கஸ்தூரி, கஜேந்திரா மீது காதல் வயப்படுகிறாள். ஆனால் கஜேந்தராவோ, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணான இந்துவை பராமரித்துக்கொள்கிறார். இந்நிலையில், கஜேந்திரா மீதிருக்கும் கஸ்தூரியின் காதல் பற்றி அழகர்சாமிக்கு தெரியவந்து, அவர்களுக்கு மனமுவந்து திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார். அதனால், அதிகாரபூர்வமாக கஜேந்திரினை தத்து எடுத்துக்கொள்ள முடிவுசெய்கிறார் அழகர்சாமி. அப்போது, இந்துவும் கஜேந்திராவும் உடன் இருப்பதை தவறாக புரிந்து கொண்ட அழகர்சாமி திருமணத்தை நிறுத்திவிடுகிறார். இசைஇந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் தேவா (இசையமைப்பாளர்) ஆவார். இப்படத்தில் இருக்கும் 5 பாடல்களுக்கும் வரிகள் எழுதியது கபிலன் மற்றும் பா.விஜய்.
தயாரிப்புராமேஸ்வரம், புஷ்கரனி, திருச்சந்தூர், வைசாக், சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற ஊர்களில் இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் மொத்தம் 5 சண்டை காட்சிகளை அமைத்துள்ளார் ராக்கி ராஜேஷ். தலக்கோணத்தில் நடக்கும் சண்டை காட்சியை படமாக்க 15 நாட்கள் தேவைப்பட்டது. கோதாவரி நதியின் அருகில் நடக்கும் சண்டை காட்சியை எடுக்க 5 நாட்கள் தேவைப்பட்டது. இந்த சண்டை காட்சியை படமாக்கும் பொழுது சண்டை குழுவை சேர்ந்த நபர் ஒருவர் தண்ணீரில் முழ்கி இறந்தார். வரவேற்புஇன்டியா கிளிட்ஸ் என்ற இணையத்தளம், இப்படம் சரியாக மறு ஆக்கம் செய்யவில்லை என்றும்,சிஃபி.காம் என்ற இணையத்தளம் நேர விரையம் என்றும் விமர்சனம் செய்தன. [சான்று தேவை] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia