சங்கமம் (1999 திரைப்படம்)
சங்கமம் (Sangamam) 1999இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் இதில் ரகுமான் நாயகனாக நடித்துள்ளார். நடிகை விந்தியாவிற்கு இது முதற் படம் ஆகும். இத்திரைப்படத்தில் விஜயகுமாருக்கு மகளாக நடித்துள்ளார் விந்தியா. ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.[1][2] நடிகர்கள்பாடல்கள்இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இத்திரைப்படத்தில் பழம்பெரும் இசையமைப்பாளர் ம. சு. விசுவநாதன் முதற் தடவையாக ஏ. ஆர். ரகுமான் இசையில் "மழைத்துளி மழைத்துளி" என்ற பாடலைப் பாடினார்.[3]
விருதுகள்இத்திரைப்படத்தில் பணியாற்றியதற்காக வைரமுத்து, 2000 ஆம் ஆண்டு, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதையும், தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் [5][6] பெற்றார். இது அவருக்கு நான்காவது தேசிய விருதாகும். ஏ. ஆர். ரகுமான் தமிழக அரசின் சிறந்த இசைமைப்பாளருக்கான விருதைப் பெற்றார். எஸ். ஜானகி சிறந்த பாடகிக்கான விருதைப் பெற்றார். கிருட்டிணமூர்த்தி சிறந்த கலை இயக்குநருக்கான விருதைப் பெற்றார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia