கடசிரத்த
கடசிரத்த (Ghatashraddha, பொருள்: சடங்கு) என்பது 1977 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய கன்னட மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கிரிஷ் காசரவள்ளி இயக்கியுள்ளார். மீனா குட்டப்பா, நாராயண பட், அஜித் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் உ. இரா. அனந்தமூர்த்தியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஆகும். இயக்குநராக கிரீசு காசரவள்ளி பணியாற்றிய முதல் திரைப்படம் இதுவாகும். இது ஒரு நம்பிக்கைக்குரிய புதிய திரைப்பட இயக்குனரின் வருகையை குறிக்கும் படம் மட்டுல்ல, இந்தியாவின் கன்னடத் திரைப்படத்தை நிமிர்ந்து பார்க்கவைத்த ஒரு புதுமை இயக்குனரின் படமும் ஆகும். [1] இந்தத் திரைப்படம் 1977 ஆம் ஆண்டின் திரைப்படங்களுக்காக வழங்கப்பட்ட 25வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளைப் பெற்றது. இது சிறந்த திரைப்படம், சிறந்த இசை இயக்கம் ( பி. வி. கராந்த் ) மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம் (அஜித் குமார்) ஆகிய விருதுகளைப் பெற்றது. 2002 ஆம் ஆண்டில், திரைப்படக் கலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது, 100 பேர்களால் பாரீஸ் தேசிய ஆவணக் காப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படம் கடசிரத்த ஆகும். [2] [3] 2009 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், 1.6 மில்லியன் வாக்குகளைப் பெற்று இந்தியத் திரைப்படத்துறையின் 20 சிறந்த படங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. [4] [5] அமெரிக்க திரை மேதை மார்ட்டின் ஸ்கோர்செசியின் திரைப்படப் புத்துருவாக்கத் திட்டம், ஜோர்ச் லூகாசின் ஹாப்சன்/லூகாஸ் குடும்ப அறக்கட்டளை, சிவேந்திர சிங் துங்கர்பூரின் இந்தியப் பாரம்பரியத் திரைப்பட அறக்கட்டளை ஆகியவை இணைந்து செயல்படுத்திய திட்டத்தின் ஒரு பகுதியாக 2024 ஆம் ஆண்டு பெப்ரவரியில், இப்படத்தின் பிரதியைக் காக்கும் ஒரு பணியாக இப்படத்தின் பிரதியை 4கே எண்ணிம தர முறையில் மறு பிரதியாக்கம் செய்யப்பட்ட சிறப்பைப் பெற்றது.[6][7] கதைச்சுருக்கம்கதை 1940களில் கருநாடகத்தின் ஒரு சிற்றூரில் நடப்பதாக உள்ளது. உடுபா (ராமசுவாமி ஐயங்கார்) தனது கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஒரு வேத பாடசாலையை நடத்தி வருகிறார். பாடசாலையில் பயிலும் கட்டுப்பாடற்ற மற்றும் கட்டுக்கடங்காத மாணவர்களைத் தவிர, இளம் வயதிலேயே விதவையான தனது மகள் யமுனாவும் (மீனா குட்டப்பா) இவருடன் வசிக்கிறார். தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி சிறுவன் நானி (அஜித் குமார்) புதிய மாணவனாக பாடசாலையில் வந்து சேர்கிறான். வீட்டு நினைவாகவே உள்ள நானிக்கும் யமுனாவுக்கும் இடையே ஒரு பாசப்பிணைப்பு உருவாகிறது. யமுனாவுக்கு ஏற்கனவே ஒரு காதலன் உண்டு. அவன் பள்ளி ஆசிரியன். அவனை இவள் இரகசியமாக சந்திக்கிறாள். இவளும் அவனால் கருவுருகிறாள். உடுபா தனது சிதிலமடைந்த பள்ளிக்கு நிதி திரட்டுவதற்காக வெளியூர் செல்கிறார். அப்போது, பள்ளியில் நடவடிக்கைகள் கைமீறிப்போகிறது. மாணவர்கள் கட்டுப்பாட்டை மீறுகிறார்கள், யமுனா கருவுற்ற செய்தி கிராமம் முழுவதும் பரவுகிறது. ஆச்சாரமிக்க கிராம மக்கள் யமுனாவை கிராமத்தைவிட்டு வெளியேற்றுகிறார்கள். அவள் காதலன் யாருக்கும் தெரியாமல் ஒரு மருத்துவச்சியைக் கொண்டு அவளின் கருவைக் கலைத்து விடுகிறான். உடுபா திரும்பி வந்து என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து, உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்கிறார். இவ்வளவு நடந்த பிறகும், இக்கிராமத்தில் நானி மட்டுமே யமுனாவை உறுதியாக ஆதரிக்கிறான். அவனது தந்தை நீண்ட காலமாகியும், அவனை அழைத்துச் செல்ல வரவில்லை. யமுனா மொட்டையடித்து, ஒரு ஆலமரத்தடியில் கைவிடப்படுகிறாள். நடிகர்கள்
தயாரிப்புகிரிஷ் காசரவள்ளி நாடகக் கலைஞர் கே. வி. சுப்பண்ணா மூலம் கடசிரத்த கதை உரிமைக்காக உ. இரா. அனந்தமூர்த்தியை அணுகினார். அப்போது அமெரிக்காவில் இருந்த அனந்தமூர்த்தி, இந்தியா திரும்பியதும் காசரவள்ளியிடம் திரைக்கதையைக் கேட்டு அனுமதி அளித்தார். அவரது முன்னாள் மாணவி மீனா குட்டப்பா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். [8] விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
வார்ப்புரு:NationalFilmAwardBestFeatureFilmவார்ப்புரு:Girish Kasaravalli |
Portal di Ensiklopedia Dunia