கதிரி வெங்கட ரெட்டி
கதிரி வெங்கட ரெட்டி (Kadiri Venkata Reddy) கே. வி. ரெட்டி எனவும் அழைக்கப்படும் (ஜூலை 1, 1912 – 15 செப்டம்பர் 1972) இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றினார். தென்னிந்தியத் திரைப்படத் துறையில் செல்வாக்கு மிக்க இயக்குனராகக் கருதப்படுகிறார்.[1][2][3] இவர் 14 முழு நீளத் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[2] மேலும் மூன்று தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் வென்றார்.[4] பணிகள்இவரது படஙகளில் மாயாபஜார் (1957), ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம் (1962), ஸ்ரீ கிருஷ்ண சத்யா (1972) போன்ற புராணத் திரைப்படங்கள் அடங்கும். மேலும், குணசுந்தரி கதா (1949), பாதாள பைரவி (1951), ஜகதேக வீருணி கதா (1961) போன்ற கற்பனைத் திரைப்படங்களும், பக்த போதனா (1942), யோகி வேமனா (1947), மற்றும் பெத்த மனுசுலு (1954), தொங்க ராமுடு (1955), பெல்லினாட்டி பிராமணலு[a] (1959) போன்ற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களும் அடங்கும்.[5][6] இவரது பாதாள பைரவி 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே தென்னிந்திய திரைப்படம் ஆகும். தொங்க ராமுடு இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் பாடத்திட்டத்தில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளது.[7] மாயாபஜார் தெலுங்குத் திரைப்பட வரலாற்றின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[8][9][10] ஏப்ரல் 2013 இல் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில், சிஎன்என்-ஐபிஎன் செய்தி நிறுவனம் "எல்லா காலத்திலும் 100 சிறந்த இந்திய திரைப்படங்கள்" என்ற தனது பட்டியலில் பாதாள பைரவி மற்றும் மாயாபஜாரை சேர்த்தது.[11] பட்டியலில் உள்ள திரைப்படங்கள் இடம்பெற வேண்டிய படங்களுக்கான இணைய வாக்கெடுப்பில், மாயாபஜார் "எல்லா காலத்திலும் சிறந்த இந்திய திரைப்படம்" எனப் பொதுமக்களால் வாக்களிக்கப்பட்டது.[12] விருதுகள்
பிரபலமான கலாச்சாரத்தில்நடிகையர் திலகம் (2018) மற்றும் என்டிஆர்: கதாநாயகுடு (2019) ஆகிய படங்களில் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடியால் கே. வி. ரெட்டி சித்தரிக்கப்பட்டுள்ளார். குறிப்புகள்
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia