இது இந்து சமய விழாக்களை பட்டியலிடும் கட்டுரையாகும்.
நாள்காட்டி வகைகள்
பாரதத்தில் ஞாயிறு (நிரயனமுறை, செம்மஞ்சள்), திங்கள் (அமையந்தமுறை, நீலம்), திங்கள் (பூரணையந்தமுறை, சிவப்பு) நாள்காட்டிகள் பின்பற்றும் பகுதிகளின் வரைபடம்
பாரதத்தில் தற்காலத்தில் நான்கு வகை நாள்காட்டிகள் பின்பற்றப்படுகின்றன.
ஞாயிறு நாள்காட்டி
நிரயனமுறை - அயனபாகத்தைக் கணக்கில் கொள்ளாது புவியிலிருந்து பார்க்கும் பொழுது ஓரைகளின் பின்னணியில் ஞாயிற்றின் நகர்வை அளந்து கணக்கிடப்படும் ஆண்டுமுறையும் அந்த ஆண்டைப் பகுத்துக் கணக்கிடப்படும் ஞாயிறுமுறையும் (திங்கள்முறையும்) கொண்டது. - வரைபடத்தில் செம்மஞ்சள்நிறம்
திங்கள் நாள்காட்டி
அமையந்தமுறை - அமையை திங்களின் கடைசி நாளாகக் கொண்டு கணக்கிடப்படும் திங்கள்முறை - வரைபடத்தில் நீலநிறம்
பூரணையந்தமுறை - பூரணையை திங்களின் கடைசி நாளாகக் கொண்டு கணக்கிடப்படும் திங்கள்முறை - வரைபடத்தில் சிவப்புநிறம்
அமைக்குப் பின் பிறை தெரியும் முதல் நாளான மூன்றாம்பிறையை (வளர்பிறை துவிதியையை) திங்களின் முதல் நாளாகக் கொண்டு கணக்கிடப்படும் திங்கள்முறை
இவற்றில், அமையந்தம் முறையில் கணக்கிடப்படும் திங்களில் வளர்பிறை முதலிலும் தேய்பிறை இரண்டாவதாகவும் வரும். பூரணையந்தம் முறையில் கணக்கிடப்படும் திங்களில் தேய்பிறை முதலிலும் வளர்பிறை இரண்டாவதாகவும் வரும். ஒரு திங்களில் இரண்டு முறைகளிலும் வளர்பிறை பொதுவாக வரும். அமையந்தம் முறையில் வளர்பிறை பக்கத்திற்கு பிந்தைய தேய்பிறைப் பக்கத்தை அத்திங்களின் தேய்பிறைப் பக்கமாகவும் பூரணையந்தம் முறையில் வளர்பிறைப் பக்கத்திற்கு முந்தைய தேய்பிறைப் பக்கத்தை அத்திங்களின் தேய்பிறைப் பக்கமாகவும் எடுத்துக்கொள்வர்.
இவையல்லாமல், தமிழ்நாட்டில் சங்ககாலத்தில், நிரயனமுறை ஞாயிறு நாள்காட்டியுடன் சேர்த்து பூரணையைத் திங்களின் முதல் நாளாகக் கொண்டு கணக்கிடப்படும் திங்களைக் கொண்ட திங்கள் நாள்காட்டியும் இருந்துள்ளது. ஞாயிறு நாள்காட்டியில் மற்றொரு முறையான புவியிலிருந்து பார்க்கும் பொழுது ஞாயிறு உதயத்தின் வடக்கு தெற்கு நகர்வை வைத்து ஆண்டைக் கணக்கிடும் அயனமுறையைப் பற்றி அறிந்திருந்தாலும் நிரயனமுறை ஞாயிறு நாள்காட்டியையே பின்பற்றி வந்துள்ளனர்.
காணும் பொங்கல்(உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல்)
கன்னிப்பொங்கல்(உடன்பிறந்த அண்ணன் தம்பிமார் நலமும் வளமுமாய் வாழ அக்காள் தங்கைமார் செய்யும் நோன்பு(கணுப்பண்டிகை)[5][6][7][8], மணமாகாத கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாத நோன்பிருந்து பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்வு[9])
ஞாயிறு நாட்காட்டி என்றால் திங்கள் என்பது ஞாயிற்றின் இருப்பிடத்தைக் குறிக்கும்(சித்திரைத்திங்கள்=மேழஞாயிறு,...,பங்குனித்திங்கள்=மீனஞாயிறு). 1 ஓரைவட்டம்(ராசிச்சக்ரம்)=12 ஓரை(ராசி)=360 பாகை.
நாளில் உள்ள நாண்மீன்(நாள்+மீன்=நாண்மீன்,நக்ஷத்ரம்) என்பது திங்களின் இருப்பிடத்தைக் குறிக்கும்.
ஞாயிறு நாட்காட்டியில் நாள் என்றால் நாண்மீன். நாண்மீன் என்றால் திங்களின் இருப்பிடத்தைக் குறிக்கும். 1 நாண்மீன்வட்டம்=27 நாண்மீன்=360 பாகை.
திங்கள் நாட்காட்டியில் நாள் என்றால் திதி. திதி என்றால் புவியை நடுவில் வைத்துப் பார்க்கும் பொழுது ஞாயிறு, திங்கள் இடையே உள்ள கோணத்தைக் குறிக்கும். ஞாயிறு-திங்கள்-புவி=0 பாகை=அமை. ஞாயிறு-புவி-திங்கள்=180 பாகை=பூரணை.
நாளைக் குறிக்கும் முறை=திங்கள்+நாள்
ஞாயிறு நாட்காட்டியில், ஞாயிறு இருக்கும் ஓரை=திங்கள், திங்கள் இருக்கும் நாண்மீன்=நாள். இவை இரண்டையும் சேர்த்தே நாள் குறிப்பிடப்படுகிறது. காட்டாக, வைகாசி விசாகம் என்றால் அன்று ஞாயிறு இடப ஓரையிலும்(வைகாசித்திங்கள்=இடபஞாயிறு) திங்கள் விசாக நாண்மீனிலும் இருப்பதாகப் பொருள்.
ஒரு நிகழ்வு நிகழும் பொழுதும் நாள் இதன்படியே கூறப்படுகிறது. நாள் எண் என்பது இன்று ஆங்கில நாட்காட்டியில் உள்ளதைப் போல புறவாழ்வின்(Civil) பயன்பாட்டிற்காக பயன்படுவது. அதே நேரம், இங்கு கூடுதலாக நாள் எண் என்பது ஞாயிற்றின் இருப்பிடத்தையும் குறிக்கிறது. காட்டாக, ஆடி 18 என்றால் தோராயமாக ஞாயிறானவர் ஆயிலிய நாண்மீனில் நுழைகிற நாள் என அறியலாம். இது ஆங்கில நாட்காட்டியில் இயலாது.
பிறந்தநாள்
ஞாயிறு நாட்காட்டியில், ஒருவர் பிறக்கும் பொழுது ஞாயிறு இருக்கும் ஓரை=பிறந்ததிங்கள். திங்கள் இருக்கும் நாண்மீன்=பிறந்தநாள். ஞாயிறு நாட்காட்டியில், ஒருவர் பிறந்த பொழுது ஞாயிறு இருந்த அதே ஓரைக்கும் திங்கள் இருந்த அதே நாண்மீனிற்கும் வருவதே பிறந்தநாள் ஆகும். காட்டாக, வைகாசி விசாகம் பிறந்தநாள் என்றால் ஞாயிறு இடப ஓரையிலும்(வைகாசித்திங்கள்=இடபஞாயிறு) திங்கள் விசாக நாண்மீனிலும் இருப்பதாகப் பொருள். ஆண்டுதோறும் இச்சேர்க்கை நிகழும் நாளே பிறந்தநாள்.
திங்கள் நாட்காட்டியில், ஒருவர் பிறக்கும் பொழுது நடக்கும் திங்கள்=பிறந்ததிங்கள், ஒருவர் பிறக்கும் பொழுது இருக்கும் திதி=பிறந்தநாள்.
வயதைக் கூறும் பொழுது, ஓராண்டு அல்லது ஓராண்டிற்கு மேல் என்றால் முழுமையாக நிறைவடைந்த ஆண்டுகளின் எண்ணிக்கையைக் கூறுவது மரபு.
பொதுக் குறிப்பு
விழா என்றால் நோன்பும் வழிபாடும் சேர்ந்தே இருக்கும்
நோன்பு என்றால் வழிபாடும் சேர்ந்தே இருக்கும்
பிறந்தநாள் என்றால் வழிபாடும் சேர்ந்தே இருக்கும்
ஞாயிறுப்பெயர்ச்சி
ஓரைவட்டத்தில் நிகழும் பெயர்ச்சி=திங்கட்பிறப்பு - ஒவ்வொரு திங்களின் பொழுதும் அதற்கான ஓரை, ஞாயிறு உதயத்தின் பொழுது உதயமாகும்
ஞாயிறானவர் கார்த்திகை(அழல்=நெருப்பு,அழல்=கார்த்திகை) நாண்மீனில் பயணிக்கும் நாள்கள் அக்கினி நட்சத்திரம் ஆகும். இதை பல்வேறு முறைகளில் கணக்கிட்டுப் பின்பற்றுகின்றனர்.
உகாதி=கன்னடம் மற்றும் தெலிங்கு புத்தாண்டு - தற்பொழுது நடக்கும் சதுர்யுகத்தில் தற்பொழுது நடக்கும் நான்காவது உகமான கலியுகம் இந்நாளில் பிறந்ததால் இந்நாள் உகாதி என்றழைக்கப்படுகிறது
தற்பொழுது நடக்கும் சதுர்யுகத்தில் நூறு விழுக்காடு அறமே நிறைந்திருக்கும் முதல் உகமான கிருதயுகம்(சத்தியயுகம்) இந்நாளில் பிறந்ததால் இந்நாளை கிருதயுகத்தின் புத்தாண்டாகக் கொண்டாடி இந்நாளில் அறச்செயல்கள் புரிவது மரபு
திங்கள் நாட்காட்டிப்படி கணிக்கப்பட்ட ஒரு நாளை அப்படியே ஞாயிறு நாட்காட்டியில் பார்த்தால் சில ஆண்டுகளில் திங்கள் மாறி வரும். காட்டாக, இராம நவமி திங்கள் நாட்காட்டிப்படி சித்திரைத் திங்களில் வரும். அதே நேரம், திங்கள் நாட்காட்டிப்படி கணிக்கப்பட்ட அந்த நாளை ஞாயிறு நாட்காட்டியில் பார்த்தால், சில ஆண்டுகளில் பங்குனியில் வரும். சில ஆண்டுகளில் சித்திரையில் வரும். ஞாயிறு நாட்காட்டியில், ஒரு விழாவின் திங்கள் மாறி மாறி வந்தாலே அது திங்கள் நாட்காட்டிப்படி வரும் விழா என்று பொருள்.