கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம்
கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம் (Canadian Arctic Archipelago) அல்லது பெரும்பாலான நேரங்களில் ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம் கனடாவின் பெருநிலத்தின் வடக்கே உள்ள தீவுக் கூட்டங்களாகும். வட அமெரிக்காவின் வடகோடியில் ஆர்க்டிக்கு பெருங்கடலில் ஏறத்தாழ 1,424,500 km2 (550,000 sq mi) பரப்பளவில்அமைந்துள்ள இத்தீவுக்கூட்டத்தில் 36,563 தீவுகள் அடங்கியுள்ளன. வடக்கு கனடாவின் பெரும்பான்மையான நூனவுட் மற்றும் வடமேற்கு நிலப்பகுதிகளின் சில பகுதிகள் இதில் அடங்கியுள்ளன.[1] கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டத்தில் புவி சூடாதலின் சில விளைவுகளை உணர முடிகின்றது;[2][3] இவை உருகுவதன் காரணமாக 2100ஆம் ஆண்டில் கடல் மட்டங்கள் 3.5 cm (1.4 அங்) உயரும் என சில கணினி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.[4] முதன்மைத் தீவுகள்இந்தத் தீவுக்கூட்டத்தில் bigger than 130 ச.கி.மீ. விட கூடுதலான பரப்பளவைக் கொண்ட 94 முதன்மைத் தீவுகள் உள்ளன; உலகின் மிகப்பெரிய முதல் பத்துத் தீவுகளில் மூன்று இதில் அடங்கியுள்ளன. இவற்றைத் தவிர 36,469 சிறு தீவுகள் உள்ளன. 10,000 ச.கி.மீ.க்கும் கூடுதலான பரப்பளவுள்ள பெரிய தீவுகளாவன:
* வமே = வடமேற்கு நிலப்பகுதிகள், நூ = நூனவுட் மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia