கம்பர் விருது

கம்பர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. கம்பராமாயணத்தின் உயரிய கருத்துக்களைப் பரப்பும் சிறந்த அறிஞருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்து சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 முனைவர் பால.இரமணி[1] 2013
2 முனைவர் செ.வை.சண்முகம் 2014
3 கோ.செல்வம் 2015
4 இலங்கை ஜெயராஜ் 2016
5 சுகி. சிவம் 2017
6 முனைவர் க. முருகேசன் 2018
7 முனைவர் சரசுவதி இராமநாதன் 2019
8 மருத்துவர் எச்.வி. ஹண்டே 2020
9 பாரதி பாஸ்கர் 2021
10 மா. இராமலிங்கம் [2] 2022
11 முனைவர் ம.பெ.சீனிவாசன் [3],[4] 2023

மேற்கோள்கள்

  1. தமிழறிஞர்கள் 4 பேருக்கு அரசு விருதுகள் (தினமணி செய்தி)
  2. "தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கல்". தினமலர். 2024-02-23. Retrieved 2025-01-08.
  3. "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
  4. "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.

புற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya