திருவள்ளுவர் விருது (Thiruvalluvar Award) என்பது பண்டைய கவிஞர்-தத்துவஞானி, உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின்நினைவாக இந்தியாவின்தமிழக மாநில அரசு வழங்கும் ஆண்டு விருது ஆகும். இந்த விருது திருக்குறள் இலக்கியத்திற்கும் அதன் தத்துவத்திற்கும் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதானது 1986ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில், தமிழக அரசு திருவள்ளுவர் தினமாககடைபிடிக்கப்படும் தை மாதத்தின் 2வது நாளில் வழங்கப்படுகிறது. இந்த விருது தமிழ் மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.[1]
விருது
திருவள்ளுவர் விருதினை பெறுபவருக்கு ₹ 100,000 பணமும் 1- பவுன் தங்கப் பதக்கம், மற்றும் சான்று வழங்கப்படும்.[2] விருதில் முதலில் ₹ 10,000 ரொக்கப் பரிசு மட்டுமே வழங்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு முதல், பரிசுத் தொகை ₹ 20,000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 1999ஆம் ஆண்டு முதல், பரிசுத் தொகை மீண்டும் தற்போதைய ₹ 100,000 ஆக உயர்த்தப்பட்டது.[1]