ஹைலாகாண்டி மாவட்டம்அசாமில் உள்ளது. கசார் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் ஐலாகாண்டி நகரம் ஆகும். இந்த மாவட்டம் 1327 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[2] இந்த மாவட்டத்தின் பாதிப் பகுதி காடுகளால் சூழப்பட்டது.
பொருளாதாரம்
இது வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சிக்கான நிதியைப் பெறுகிறது.[3]
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 659,260 மக்கள் வசித்தனர்.[4]
சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 497 பேர் வாழ்கின்றனர்.[4] பால் விகிதாச்சார அளவு, ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 946 பெண்கள் என்ற அளவில் உள்ளது.[4] இங்கு வாழ்வோரில் 75.26% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[4]
இங்கு இசுலாமியர்களும், இந்துக்களும் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இங்கு பூர்வீக பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் வங்காள மொழியைப் பேசுகின்றனர். சிலர் மணிப்பூரி மொழியைப் பேசுகின்றனர்.
↑Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting , Government of India. pp. 1116. ISBN978-81-230-1617-7. Retrieved 2011-10-11. {{cite book}}: |last1= has generic name (help)