மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்
மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் (West Karbi Anglong district) அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளைக் கொண்டு புதிய மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் நிறுவ 15 ஆகஸ்டு 2015-இல் மாநில முதல்வர் தருண் கோகாய் அறிவித்தார்.[2] இம்மாவட்டம் அதிகாரப்பூர்வமாக 10 பிப்ரவரி 2016-இல் துவக்கப்பட்டது.[3] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அம்ரென் நகரம் ஆகும்.[4][5] இம்மாவட்டம் மலைவாழ் பழங்குடி மக்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில நகாமோ மாவட்டம், கிழக்கில் கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம், தெற்கிலும், தென்மேற்கிலும் மேகாலயா மாநிலத்தின் மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம் மற்றும் ரி-போய் மாவட்டம் உள்ளது. இது திபு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. வரலாறுஇந்திய விடுதலைக்குப் பின்னர் சைமன் ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்திற்கு, மாவட்டத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. 2016-இல் கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளைக் கொண்டு மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் மற்றும் கிழக்குப் பகுதிகளைக் கொண்டு கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. புவியியல்மத்திய அசாமில் அமைந்த கர்பி அங்லோங் பீடபூமியில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை பருவமழைக் காலம் காலம் ஆகும்.[6] கர்பி அங்லோங் பீடபூமியின் மேற்குப் பகுதி மலைகள் சூழ்ந்தும், கிழக்குப் பகுதி சமவெளியாகும். இம்மாவட்டத்தில் மைடிரியங் ஆறு, கர்பி லாபி ஆறு கோப்பிலி ஆறு மற்றும் அம்ரேங் ஆறுகள் பாய்கிறது.[7][8] மக்கள்தொகை பரம்பல்மொழிகள்இம்மாவட்டத்தில் கர்பி மொழியுடன் காரோ மொழி, திவா மொழி, ஆங்கிலம், இந்தி மற்றும் அசாமிய மொழிகள் பேசப்படுகிறது. தொடர்பு மொழியாக வங்காள மொழி பேசப்படுகிற்து. இதனையும் காணக்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia