கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளைகலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (The Indian National Trust for Art and Cultural Heritage (INTACH)) என்பது 1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும். 2007 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவை கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளைக்கு ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபையுடன் ஒரு சிறப்பு ஆலோசனை அந்தஸ்தை வழங்கியது. [1] [2] வரலாறுஇந்தியாவில் பாரம்பரிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பைத் தூண்டுவதற்கும் முன்னிலைப்படுத்துவதற்கும் ஒரு உறுப்பினர் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் 1984 ஆம் ஆண்டில் புது தில்லியில் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. 1984 ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாப்பிற்கு இந்த அமைப்பு முன்னோடியாக இருந்து வருகிறது. இன்று நாட்டின் மிகப்பெரிய உறுப்பினர் அமைப்பாகவும் உள்ளது. இன்று இது 170 இந்திய நகரங்களிலிலும் பெல்ஜியம் [3] மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு, ராஜீவ் காந்தி, பூபுல் செயகர், எல்.கே. ஜா, எம். ஜி. கே. மேனன், கபில வத்சன், ராஜீவ் சேத்தி, பி.கே.தாபர், மார்தாண்ட் சிங், பில்கீஸ் எல். இலத்தீப், மாதவ்ராவ் சிந்தியா, ஜே.பி.தாதாஞ்சி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு அறக்கட்டளையின் முதல் ஆளும் குழுவை அமைத்தன. 2007-ஆம் ஆண்டில், தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியப் பிராந்திய முன்முயற்சிகளில் ஒத்துழைக்க ஆத்திரேலியாவின் புகழ்பெற்ற பாரம்பரிய வலையமைப்பான ஆஸ்ஹெரிடேஜ் உடன் இந்த அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. [4] பணிஇந்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் நினைவுச்சின்னங்களை மீட்டெடுப்பது மற்றும் அவற்றின் மேலாண்மை ஆகியவை அடங்கும்; பாரம்பரிய சொத்து பாதுகாப்புக்கான வக்காலத்து; பாரம்பரிய நடைகள் மற்றும் பேருந்துகள் மூலம் பொது விழிப்புணர்வு; [5] பள்ளிகளில் பாரம்பரிய சங்ககங்களை நிறுவுதல், [6] பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பட்டறை நடத்துதல், [7] [8] பல்வேறு பாதுகாப்பற்ற தளங்களுக்கு பாரம்பரிய நடைகள் செல்லுத்தல் போன்றவை. [9] [10] செயற்பாடுகள்இந்த அமைப்பு அழிவுக்கு எதிரான பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது [11] ஐதராபாத்திலுள்ள எர்ரம் மன்சில் , உசுமானியா மருத்துவமனை மற்றும் பெங்களூரில் உள்ள ஜனதா பசார் உள்ளிட்ட பாரம்பரிய கட்டமைப்புகளை இடிக்க முன்மொழியப்பட்டது. மறுமலர்ச்சிபல ஆண்டுகளாக, இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களின் பாதுகாப்புக்கு வெளியே வரும் நூற்றுக்கணக்கான நினைவுச்சின்னங்களின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பை இந்த அமைப்பு எடுத்துள்ளது, [12] சில சமயங்களில் உள்ளூர் அதிகாரிகள் பாரம்பரிய கட்டமைப்புகளை பராமரித்தல் மற்றும் மீட்டெடுப்பதை நேரடியாக இந்த அமைப்புக்கு ஒப்படைக்கின்றனர்.[13] இந்தியாவின் ஒடிசாவின் ரகுராஜ்பூரை உருவாக்கிய பின்னர், அதன் மாஸ்டர் பட்டசித்ர கலைஞர்களுக்கும், கோட்டிபுவா நடனக் குழுக்களுக்கும் ஒரு பாரம்பரிய கிராமமாக புகழ்பெற்றது. இது இப்போது ஒரு பெரிய கிராமப்புற சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. பின்னர் பத்மநாபூர் கிராமத்தை உருவாக்க அதே முறையைப் பயன்படுத்தியது. ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டம், நெசவாளர்களுக்கும் நாட்டுப்புற நடனக் கலைஞர்களுக்கும் புகழ் பெற்றது. இது மற்றொரு பாரம்பரிய இடமாக உள்ளது. 2007 ஆம் ஆண்டில், கோவா அரசாங்கம் மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்ட 51 பாரம்பரிய மற்றும் கலாச்சார நினைவுச்சின்னங்களை மீட்டெடுப்பது, பாதுகாத்தல் மற்றும் பராமரிப்பதற்காக இந்த அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.கோவாவில் 16-ஆம் நூற்றாண்டின் ரெய்ஸ் மாகோஸ் கோட்டையின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு இதில் அடங்கும். [14] [15] [16] பின்னர் 2008 ஆம் ஆண்டில், தில்லியில் 92 நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பதற்காகவும் 2010 பொதுநலவாய விளையாட்டுகளை தயாரிப்பதற்காகவும் தில்லி அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.[17] சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia