மாதவ்ராவ் குவாலியர் அரசின் கடைசி மகாராஜா சிவாஜிராவ் சிந்தியாவிற்குப் பிறந்தவர். இவர் தனது உயர்படிப்பை இலண்டன் வின்செசுட்டர் கல்லூரியிலும், ஆக்சுபோர்டு புதிய கல்லூரியிலும் கற்றார். இங்கிலாந்தில் இருந்து திரும்பியவுடன், தமது தந்தையைப் போலவே அரசியலில் ஈடுபடலானார். 1971 இல் தனது 26-வது அகவையில் குவாலியரில் இருந்து மக்களவைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1971 இல் இருந்து ஒன்பது தடவைகள் மக்களவை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். எந்தத் தேர்தலிலும் இவர் தோற்றதில்லை. 1984 இல் இரயில்வே அமைச்சராக[11]ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார். 1990 முதல் 1993 வரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
இறப்பு
2001 செப்டம்பர் 30 இல் மாதவ்ராவ் சிந்தியா உத்தரப் பிரதேசம், மெயின்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார். கிங் ஏர் ச்-90 வானூர்தியில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவரக்ளில் ஊடகவியலாலர்கள் சஞ்சீவ் சின்கா (இந்தியன் எக்சுபிரசு), அஞ்சு சர்மா (ஹிந்துஸ்தான் டைம்ஸ்), ஆகியோரும் அடங்குவர்.[12]