களவாணி (திரைப்படம்)
களவாணி சேராலி பிலிம்ஸ் தயாரிப்பில் ஏ. சற்குணம் இயக்கத்தில் 2010, சூன் 25 இல் வெளிவந்த ஒரு காதல் கதையம்சம் கொண்ட தமிழ்த் திரைப்படமாகும். தஞ்சாவூர் மண்ணையும், அதன் மக்களையும் மையக்கருவாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பசங்க படத்தில் நடித்த விமல் கதாநாயகனாகவும், ஓவியா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். குறைந்த தயாரிப்பு செலவில் உருவான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.[1] பாடல்கள்இத்திரைப்படத்திற்கு எஸ். எஸ். குமரன் இசையமைத்திருந்தார். நடிகர்கள்
தயாரிப்புஏ. சற்குணம் தனது திரைக்கதையுடன் K. பாக்கியராஜை அணுகி, அந்த திரைக்கதையை மேம்படுத்துவதற்கு உதவி கேட்டதுடன், பாக்கியராஜின் மகன் சாந்தனுவை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பின்னர், சாந்தனு எதிர்பார்க்கக்கூடிய சம்பளத்தைக் குறித்து தயாரிப்பாளருக்கு இசைவு இல்லாததால் சர்குனம் பாக்கியராஜிடமிருந்து விலகியதாகத் தெரிவித்துள்ளார்.[2] விருதுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia