சரண்யா பொன்வண்ணன்

சரண்யா
பிறப்புஆலப்புழா, கேரளம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1987–1995; 2003–நடப்பு
பெற்றோர்ஏ. பி. ராஜ் (தந்தை)
வாழ்க்கைத்
துணை
ராஜசேகர்(1986-89)
பொன் வண்ணன் (தி. 1995)
பிள்ளைகள்2

சரண்யா பொன்வண்ணன் (Saranya Ponvannan, பிறப்பு: 26 ஏப்ரல் 1970) பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவரும் ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். சரண்யா, மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார்[1]. ராம்,(2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் 2006 மற்றும் களவாணி (2010) போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது; சிறந்த குணச்சித்திர நடிகைக்கான பிலிம் ஃபேர் வழங்கும் இரு விருதுகளும் கிட்டின. 2010ஆம் ஆண்டிற்கான இந்திய தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார்.

திருமண வாழ்க்கை

இயக்குநரும் நடிகருமான ராஜசேகரை சரண்யா மணந்துகொண்டார். அந்த மணவாழ்வு நீடிக்காமல் மணமுறிவு ஏற்பட்டது. பின்னர் சக நடிகரான பொன் வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் புரிந்தார்.[2]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
1987 நாயகன் நீலா தமிழ் தமிழில் முதற்படம்
1988 மனசுக்குள் மத்தாப்பூ டாக்டர் கீதா தமிழ்
என் ஜீவன் பாடுது தமிழ் தமிழ்
நீரஜனம் ஜெய தெலுங்கு
மேளம் கொட்டு தாலி கட்டு தமிழ்
சிகப்பு தாலி கீர்த்தனா தமிழ்
தாயம் ஒன்னு தமிழ்
1989 அன்று பெய்த மழையில் பிரீத்தி தமிழ்
சகலகலா சம்மந்தி உமா தமிழ்
கருங்குயில் குன்றம் தமிழ்
அர்த்தம் மானசா மலையாளம்
1990 அஞ்சலி டாக்டர் ஷீலா தமிழ்
உலகம் பிறந்தது எனக்காக தமிழ்
1991 வணக்கம் வாத்தியாரே சுந்தரி தமிழ்
ஆகாஷ கோட்டையிலெ சுல்தான் மல்லிகா மலையாளம்
செப்புகிலுக்கன சங்கதி மணிக்குட்டி மலையாளம்
நான் புடிச்ச மாப்பிள்ளை லட்சுமி தமிழ்
ஆனவால் மோதிரம் ஆனி மலையாளம்
என்னும் நன்மகள் இந்து மலையாளம்
1992 அக்னி பார்வை சீதா தமிழ்
கோட்டை வாசல் ரேகா தமிழ்
சாகசம் ரேகா தெலுங்கு
1993 தசரதன் தமிழ்
மக்ரீப் ஆரிபா மலையாளம்
ஜர்னலிஸ்ட் ரஞ்சனி மலையாளம்
என்றெ ஸ்ரீகுட்டிக்கு நந்தினி மலையாளம்
இஞ்ஞக்காடன் மத்தாய் அன்ட் சன்ஸ் பீனா மலையாளம்
1994 கருத்தம்மா பொன்னாத்தா தமிழ்
டாலர் லூசியா மலையாளம்
சீவலப்பேரி பாண்டி வேலம்மாள் தமிழ்
1995 பசும்பொன் மலர் தமிழ்
1996 மீண்டும் சாவித்திரி உமா தமிழ்
அப்பாஜி கன்னடம் கன்னடத்தில் முதற்படம்
ஈஸ்வரமூர்த்தி இன் லத்திகா மலையாளம்
2003 அலை நிர்மலா தமிழ்
சன்டிகாடு தெலுங்கு
2004 சத்ரபதி சரவணனின் சகோதரி தமிழ்
அருள் அருளின் சகோதரி தமிழ்
அது மீராவின் தாய் தமிழ்
மீசை மாதவன் தேவி தமிழ்
ராமகிருஷ்ணா தமிழ்
வர்ணஜாலம் கார்த்திகா தமிழ்
2005 அயோத்யா ஜமீலா தமிழ்
ராம் சாரதா தமிழ்
சிவகாசி கயல்விழி தமிழ்
தவமாய் தவமிருந்து சாரதா முத்தையா தமிழ் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
2006 எம் மகன் செல்வி தமிழ் சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது,

சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்

திருவிளையாடல் ஆரம்பம் திருவின் தாய் தமிழ்
ராக்கி சார்மியின் தாய் தெலுங்கு
அடைக்கலம் கஸ்தூரி தமிழ்
2007 திருமகன் ஜெயகொடி தமிழ்
ஜகடம் சீனுவின் தாய் தெலுங்கு
கிரீடம் ராஜேஸ்வரி தமிழ்
பிறப்பு காளியம்மன் தமிழ்
வேல் வேலுவுக்கும் வாசுவுக்கும் தாய் தமிழ்
புலி வருது ரமேஷின் தாய் தமிழ்
2008 பிடிச்சிருக்கு ஸ்டெல்லா தமிழ்
நெஞ்சத்தைக் கிள்ளாதே தமிழ்
சிங்கக்குட்டி கதிரின் தாய் தமிழ்
விளையாட்டு தமிழ்
குருவி தேவியின் அண்ணி தமிழ்
பாண்டி சிவகாமி தமிழ்
ரெடி தெலுங்கு
தெனாவட்டு வாழவந்தாள் தமிழ்
திண்டுக்கல் சாரதி சாரதா தமிழ்
இனி வரும் காலம் அரவிந்தனின் தாய் தமிழ்
2009 யாவரும் நலம் மனோகரின் தாய் தமிழ்
கலர்ஸ் டாக்டர் ராஜலட்சுமி மலையாளம்
2010 போலீஸ் குவார்டர்ஸ் ஜெயம்மா கன்னடம்/தமிழ்
பயம் அறியான் சரஸ்வதி தமிழ்
புள்ளிமான் யசோதா பணிக்கர் மலையாளம்
களவாணி லட்சுமி ராமசாமி தமிழ் சிறந்த துணை நடிகைக்கான ஆனந்த விகடன் விருது
குரு சிஷ்யன் மகாலட்சுமி தமிழ்
மகனே என் மருமகனே பொன்னரசியின் தாய் தமிழ்
தம்பிக்கு எந்த ஊரு குமாரசாமியின் மனைவி தமிழ்
வேதம் பத்மா தெலுங்கு
புலி புலியின் தாய் தெலுங்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு பிரிவுக்கு பரிந்துரை
நானே என்னுள் இல்லை ஜானகி தமிழ்
தென்மேற்கு பருவக்காற்று வீராயி தமிழ் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது,

சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது,

தமிழ்ப் பிரிவில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது

நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது,

சிறந்த துணை நடிகைக்கான எடிசன் விருதுகள்

2011 முத்துக்கு முத்தாக பேச்சி தமிழ்
வானம் லட்சுமி தமிழ்
சதுரங்கம் தமிழ்
மகாராஜா சீதா தமிழ்
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி செண்பகம் தமிழ் நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்றார்

தமிழ்ப் பிரிவில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை

சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருதுக்கு பரிந்துரை,

சாருலதா சாரு, லதா ஆகியோரின் தாய் தமிழ்
கன்னடம்
தாண்டவம் சிவக்குமாரின் தாய் தமிழ்
நீர்ப்பறவை மேரி தமிழ் தமிழ்ப் பிரிவில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது

சிறந்த துணை நடிகைக்கான சைமா விருது

2013 வத்திக்குச்சி சக்தியின் தாய் தமிழ்
குட்டி புலி தெய்வானை தமிழ் சிறந்த துணை நடிகைக்கான சைமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
ஆல் இன் ஆல் அழகு ராஜா மீனாட்சி தமிழ்
2014 இது கதிர்வேலன் காதல் யசோதாம்மாள் தமிழ்
நான் சிகப்பு மனிதன் சுமதி தமிழ்
என்னமோ நடக்குது விஜயின் தாய் தமிழ் சிறந்த துணை நடிகைக்கான ஆனந்த விகடன் விருதுகள்
மனம் சீதாராமுடுவின் தாய் தெலுங்கு
பப்பாளி தமிழ்
வேலையில்லா பட்டதாரி புவனா தமிழ் தமிழ்ப் பிரிவில் சிறந்த துணை நடிகைக்கான சீமா விருது பெற்றார்,

சிறந்த துணை நடிகைக்கான ஆனந்த விகடர் விருது பெற்றார்,

தமிழ்ப் பிரிவில் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்,

சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்,

நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்

2016 பெங்களூர் நாட்கள் கண்ணனின் தாய் தமிழ்
24 சத்யபாமா தமிழ்
பிரம்மோத்சவம் அஜயின் அத்தை தெலுங்கு
ரெமோ சிவாவுக்கும் ரெமோவுக்கும் தாய் தமிழ்
கொடி கொடிக்கும் அன்புக்கும் தாய் தமிழ் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் - பரிந்துரை
அச்சமின்றி ராஜலட்சுமி தமிழ்
2017 வேலையில்லா பட்டதாரி 2 புவனா தமிழ்/தெலுங்கு சிறப்புத் தோற்றம்
கதாநாயகன் தம்பிதுரையின் தாய் தமிழ்
மகளிர் மட்டும் சுப்புலட்சுமி தமிழ்
2018 மன்னர் வகையறா கலையரசி தமிழ்
இட்லி (இன்பா ட்விங்கிள் லில்லி) இன்பா தமிழ் முக்கிய கதாப்பாத்திரம்
ஜுங்கா ஜுங்காவின் தாய் தமிழ்
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஜப்பானின் தாய் தமிழ்
கோலமாவு கோகிலா கோகிலாவின் தாய் தமிழ் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் பெற்றார்

சிறந்த துணை நடிகருக்கான சைமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்

த வில்லன் விசாலாட்சியவ்வா கன்னடம்
ஒரு குப்ரசித பையன் செம்பம்மாள் மலையாளம்
2019 களவாணி 2 லட்சுமி தமிழ்
கேங் லீடர் வரலட்சுமி தெலுங்கு
2020 கள்ள பார்ட் தமிழ் இன்னும் வெளியாகவில்லை
எம் ஜி ஆர் மகன் தமிழ் இன்னும் வெளியாகவில்லை
பூமி தமிழ் படப்பிடிப்பில்
அருவா சண்டை தமிழ் படப்பிடிப்பில்
2022 எதற்கும் துணிந்தவன் கண்ணபிரான் தாய் தமிழ்

விருதுகள்

தேசியத் திரைப்பட விருதுகள்

பிலிம்பேர் விருதுகள்

மேற்கோள்கள்

  1. The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Todays-mothers-are-young-Saranya/articleshow/7639671.cms. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-07-18. Retrieved 2018-01-29.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya