களிமங்கலம்
களிமங்கலம் (ஆங்கிலம்: Kalimangalam) என்பது தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மதுரை (வடக்கு) வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், களிமங்கலம் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். [1] களிமங்கலம், மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[2] அருகமைந்த ஊர்களும், நகரங்களும்களிமங்கலத்தில் அருகமைந்த ஊர்கள்: குன்னத்தூர், செங்கோட்டை, வரிச்சியூர், நாட்டார்மங்கலம் மற்றும் பூவந்தி ஆகும். அருகமைந்த மாநகரம் மதுரை ஆகும். அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 159 மீட்டர் உயரத்தில், 9°52′49″N 78°14′28″E / 9.8804°N 78.2411°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு களிமங்கலம் அமையப் பெற்றுள்ளது. மதுரை - சிவகங்கை செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 33ல் உள்ள, வரிச்சியூருக்கு தெற்கே செல்லும் சாலையில் குன்னத்தூருக்கு அடுத்து களிமங்கலம் உள்ளது. களிமங்கலம் மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. களிமங்கலம் துணை அஞ்சலகத்தின் அஞ்சல் சுட்டு எண் 625201 ஆகும். இதன் தொலைபேசி குறியீடு எண் (STD) 0452 ஆகும். மக்கள்தொகை பரம்பல்216 சதுர ஹெக்டேர் பரப்பளவு கொண்ட களிமங்கலத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை 1,449 ஆகும். இவ்வூரில் 315 வீடுகள் உள்ளது. மக்கள்தொகையில் ஒடுக்கப்பட்டோர் 645 (44.51%) ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 78.52% ஆகவுள்ளது. [3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia