வரிச்சியூர்
வரிச்சியூர் என்பது தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மதுரை (வடக்கு) வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், வரிச்சியூர் ஊராட்சியில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும்.[1] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 168 மீட்டர் உயரத்தில், 9°54′37″N 78°15′24″E / 9.9102°N 78.2568°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு வரிச்சியூர் புறநகர்ப் பகுதி அமைந்துள்ளது. வரிச்சியூர் கிராமம், மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. வரிச்சியூர், மதுரை - தொண்டி மாநில நெடுஞ்சாலை எண் 33ல் அமைந்துள்ளது. இக்கிராமம் மதுரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் அமைந்த கிராமங்கள், குன்னத்தூர், களிமங்கலம், பூவந்தி, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், நாட்டார்மங்கலம், செங்கோட்டை மற்றும் இடையபட்டி ஆகும். மக்கள்தொகை பரம்பல்2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வரிச்சியூர் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2,338 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 111 (4.75%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.26% ஆகும். வரிச்சியூரில் 594 வீடுகள் உள்ளன. [2] மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia