காகா வனஉயிரி சரணாலயம்![]() காகா வனஉயிரி சரணாலயம் (Gaga Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் குஜராத், தேவபூமி துவாரகா மாவட்டம், கல்யாண்பூர் வட்டத்தில் அமைந்துள்ள ஓர் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இந்த சரணாலயம் நவம்பர் 1988இல் நிறுவப்பட்டது. இது 332.87 எக்டேர் பரப்பில் கச்சு வளைகுடா கடற்கரையில் உள்ள செளராட்டிரா தீபகற்பத்தில் அமைந்துள்ளது.[1] இந்த வனச் சரணாலயத்தில் புல்வெளி, உப்பு புதர்காடுகள், புரோசோபிசு சிலென்ஸிஸ், கோராடு (கேப்பாரிசு செனிகெல்), மற்றும் உகாய் (சால்வடோரா பெரிசிகா) முதலிய தாவர வகைகளும் நீலான், பொன்னிறக் குள்ளநரி, காட்டுப்பூனை, கீரி மற்றும் இந்திய ஓநாய் போன்ற பல முக்கியமான விலங்கு இனங்களும் காணப்படுகின்றன. இவற்றைத்தவிரப் பறவைகளில் பூநாரை, கானமயில், வானம்பாடி, கெளதாரி மற்றும் மண் கெளதாரி காணப்படுகின்றன.[2] கச்சு கானமயில் சரணாலயத்துடன், கங்கா சரணாலயமும், கானமயில் பாதுகாப்புக்காக நிறுவப்பட்ட ஓர் சரணாலயம் ஆகும். அனைத்து குஜராத் சரணாலயங்களிலிருந்தும் கானமயில் காணாமல் போயிருந்தாலும் இந்த இரண்டு சரணாலயங்களும் கானமயிலை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாத்து வருகின்றன.[3] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia