காதலிக்க நேரமில்லை (2025 திரைப்படம்)
காதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai) என்பது 2025 இல் கிருத்திகா உதயநிதியின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] காதல் நகைச்சுவை தொடர்பான இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்தார். இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[2] யோகி பாபு, வினய், ஜான் கோக்கன், லால் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். காதலிக்க நேரமில்லை என்ற தொலைக்காட்சித் தொடரின் தலைப்புடன் இப்படம் 2023 நவம்பர் மாதம் முறையாக அறிவிக்கப்பட்டது. முதன்மைப் படம் எடுக்கும் பணி அதே நவம்பர் மாதத்தில் தொடங்கியது. திரைப்படப் பணிகள் பெரும்பாலும் சென்னையில் படமாக்கப்பட்டு 2024 மே மாத இறுதியில் நிறைவுற்றது. இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க, கவாமிக் யூ ஆரி ஒளிப்பதிவு செய்ய, இலாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படம் 2025 சனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. நடிகர்கள்
பாடல்கள்இத்திரைப்படத்தின் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார்.[3] 2024 நவம்பர் 22 அன்று "என்னை இழுக்குதடி" என்ற முதற் தனிப்பாடல் வெளியிடப்பட்டது.[4] இரண்டாவதாக 2024 திசம்பர் 18 அன்று "இலாவெண்டர் நேரமே" என்ற தனிப்பாடல் வெளியிடப்பட்டது.[5] 2025 சனவரி 4 அன்று "இட்ஸ் எ பிரேக் அப் டா" என்ற மூன்றாவது தனிப்பாடல் வெளியிடப்பட்டது.[6] அனைத்துப் பாடல்களும் 2025 சனவரி 7 அன்று வெளியிடப்பட்டது.[7][8] 2025 சனவரி 7 அன்று "பேபி சிக்கி சிக்கி" என்ற நான்காவது தனிப்பாடல் வெளியிடப்பட்டது.[9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia