நித்யா மேனன்
நித்யா மேனன்[2][3][4] (பிறப்பு:ஏப்ரல் 8, 1988) இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியும் ஆவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை என்ற தேசிய விருதை வென்றார்.[5] ஆரம்ப வாழ்க்கைநித்யா மேனன் பெங்களூரில் ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். தான் திரைத்துறையில் நடிப்பதற்கு விரும்பியது கிடையாது பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் பிறகு பத்திரிக்கை துறையில் இருந்த விருப்பம் குறைந்ததினால் புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள். நடித்துள்ள திரைப்படங்கள்தமிழ்
தெலுங்கு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia