காதேஷ் (சிரியா)
![]() ![]() காதேஷ் (Kadesh, or Qadesh), பண்டைய அண்மை கிழக்கின் லெவண்ட் பகுதியில் உள்ள தற்கால சிரியா நாட்டின் ஹோம்ஸ் ஆளுநரகத்திற்கு மேற்கே, லெபனான்-சிரியா எல்லையில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இது ஓரண்டஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் குறித்து அமர்னா நிருபங்களில் குறிக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தில் கிமு 13ம் நூற்றாண்டில் புது எகிப்திய இராச்சியத்திய மன்னர் இரண்டாம் ராமேசஸ் படையினருக்கும், மெசொப்பொத்தேமியாவின் இட்டைட்டு பேரரசர் இரண்டாம் முவதல்லியின் படைகளுக்கு இடையே போர் மூண்டது. காதேஷ் போரில் தோற்ற இட்டைட்டு படையினரை, போர்க் கைதிகளாக கொண்டு செல்லும் புடைப்புச் சிற்பக் காட்சி மெடிநெத் அபு கோயிலில் உள்ளது. பின்னர் இட்டைட்டு பேரர்சு புது எகிப்து இராச்சியத்தின் கீழ் சிற்றரசாக 150 ஆண்டு காலம் இருந்தது. அமர்னா நிருபங்கள்இட்டைட்டுப் பேரரசு-புது எகிப்திய இராச்சியத்தினருக்கும் நடைபெற்ற கடிதப் போக்குவரத்துகள் செய்தி கொண்ட அமர்னா நிருபங்களில் காதஷ் நகரம் குறிக்கப்பட்டுள்ளது. கிமு 1178ல் காதேஷ் நகரங்கள் கடலோடிகளால் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டது. எலனியக் காலத்திய சிதைவடைந்த கட்டிடங்கள் இந்நகரத்தின் அகழாய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையும் காண்கமேற்கோள்கள்ஆதார நூல்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia