காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், கோயம்புத்தூர்
வரலாறுகோயம்புத்தூர் நகரில் பேருந்து சேவைக்காக முதன்முதலாக காந்திபுரத்தில் ஒரு புறநகர் பேருந்து நிலையம் 1974ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் நகரில் எழுந்த போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு உக்கடம், சிங்காநல்லூர், சாய்பாபாகாலனி பகுதிகளில் துணை-பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டன. சேலம், ஈரோடு, தருமபுரி, ஓசூர், நாமக்கல், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் மற்றும் திருப்பூர் செல்லும் வடகிழக்கு மற்றும் வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு நோக்கி தாராபுரம் மற்றும் கரூர் செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையமாக காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. கோயம்புத்தூர் கோட்டத்தால் இயக்கப்படும் 119 நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்கள் உள்ளன. இத்தடங்களில் 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[2] சேவைகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia