காந்தேஷ் பிரதேசம்
![]() காந்தேஷ் பிரதேசம் (Khandesh) மத்திய இந்தியாவின் வடமேற்கு மகாராட்டிரா மற்றும் தென்தெற்கு மத்தியப் பிரதேசத்தில் அமைந்த புவியியல் மற்றும் வரலாற்றுப் பகுதியாகும்.[1] இது தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் ஜள்காவ் மாவட்டம், துளே மாவட்டம் மற்றும் நந்துர்பார் மாவட்டம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது. புவியியல்தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் நாசிக் மண்டலத்தின் வடக்குப் பகுதியில் தபதி நதி பள்ளத்தாக்கில் காந்தேஷ் பிரதேசம் அமைந்துள்ளது. மத்திய இந்தியாவின், வடமேற்கு தக்காண பீடபூமியில் தபதி ஆற்றுச் சமவெளியில் அமைந்துள்ளது. காந்தேஷ் பிரதேசத்தின் வடக்கில் சாத்பூரா மலைத்தொடர்களும்; கிழக்கில் தெற்கில் மரத்வாடாவும், மேற்கில் மேற்கு தொடச்சி மலைகளும் எல்லைகளாக உள்ளது.[2] காந்தேஷ் பிரதேசத்தில் பாயும் முதன்மை ஆறு தபதி ஆறாகும்[3]தக்காணப் பீடபூமியில் பாயும் அனைத்து ஆறுகளும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஆனால் மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பேதுல் பகுதியில் உற்பத்தியாகும் தபதி ஆறு, மகாராட்டிராவின் காந்தேஷ் பிரதேசம் வழியாக பாய்ந்து பின்னர் குசராத் மாநிலத்தின் வழியே அரபிக் கடலின் காம்பத் வளைகுடாவில் கலக்கிறது. காந்தேஷ் பிரதேசத்தின் வழியாகப் பாயும் தப்தி ஆறு 13 முதன்மை துணை ஆறுகளைக் கொண்டது. தப்தி ஆற்றின் தெற்கில் அமைந்த பெரும்பாலான காந்தேஷ் பிரதேசத்தின் பெரும் பகுதிகளை தப்தி ஆற்றின் துணை ஆறுகளான கிர்னா ஆறு, போரி ஆறு மற்றும் பஞ்சாரா ஆறுகளால் வளம் பெறுகிறது. தப்தி ஆற்றின் வடக்கில் உள்ள காந்தேஷ் பிரதேசங்கள் வளமான வண்டல் மண்ணைக் கொண்டுள்ளது. காந்தேஷ் மலைப்பகுதிகளில் பழங்குடி பில் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர்.[4] வரலாறுதில்லி சுல்தானகங்கள்1295-இல் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி]] ஆட்சியின் போது, காந்தேஷ் பகுதியை இராஜபுத்திர சௌகான் குல மன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.[5]:41}பின்னர் காந்தேஷ் பிரதேசத்தை பல்வேறு தில்லி சுல்தான்களின் ஆட்சியில் இருந்தது.[5]:418 1370 முதல் 1600 வரை பருக்கீ வம்சத்தினர் புர்ஹான்பூர் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு காந்தேஷ் பிரதேசத்தை குறுநில மன்னராக ஆண்டனர்.[5]:418 1388-இல் தில்லி சுல்தான் பெரோஷ் ஷா துக்ளக் இறந்த போது, காந்தேஷ் பகுதியின் படைத்தலைவராக இருந்த பரூக்கி வம்சத்தின் மாலிக் ராஜா என்பவர் தன்னை காந்தேஷ் இராச்சிய மன்னராக அறிவித்துக் கொண்டு 1399 வரை காந்தேஷ் இராச்சியத்தை ஆண்டார்.[6] முகலாயர் ஆட்சியில்1599-இல் முகலாயப் பேரரசர் அக்பர் காந்தேஷ் பிரதேசத்தை கைப்பற்றினார்.[5]:418 அக்பரின் மகன் தனியால் மிர்சா பெயரால் காந்தேஷ் பிரதேசமானது தண்டேஷ் எனப்பெயர் மாற்றம் பெற்றது.[7]:248 முகலாலயப் பேரரசின் நிதி அமைச்சராக இருந்த தோடர்மாலின் நில நிர்வாக அமைப்பைப் பின்பற்றி, 1640-இல் காந்தேஷ் பிரதேசத்தில், முகலாயப் பேரரசர் ஷாஜகான் நில நிர்வாக அமைப்பை சீரமைத்தார்.[7]:250 17-ஆம் நூற்றாண்டின் நடுவில் காந்தேஷ் பிரதேசத்தில் பருத்தி, நெல், கரும்பு, கருநீலச் சாயங்கள் மற்றும் துணிகள் உற்பத்தியில் பெரும்பங்கு வகித்தது.[7]:2501760-இல் மராத்தியப் பேரரசு|மராத்தியர்கள்]] காந்தேஷ் பிரதேசத்தை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினர்.[5]:418 மராத்தியர் ஆட்சியில்1670-இல் மராத்தியப் பேரரசுப் படைகள் காந்தேஷ் பிரதேசத்தின் மீது படை எடுத்து கைப்பற்றினர்.[5]:418 1760-இல் மராத்தியப் பேஷ்வாக்களின் ஹோல்கர் மற்றும் சிந்தியா வம்சத்தினர் முகலாயப் பேரரசை வீழ்த்தி காந்தேஷ் உள்ளிட்ட அனைத்து மேற்கிந்தியப் பகுதிகளை கைப்பற்றினர்.[5]:418 1818-இல் இரண்டாம் பாஜி ராவ், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளரகளிடம் அடைக்கலமான போது, காந்தேஷ் பிரதேசமும், பிரித்தானிய இந்தியாவின் கீழ் சென்றது.[8]:9 பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில்![]() பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் காந்தேஷ் பிரதேசம் மும்பை மாகாணத்தின் கீழ் ஒரு மாவட்டமாக விளங்கியது.[9] 1906-இல் காந்தேஷ் மாவட்டதை ஜல்கான் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு கிழக்கு காந்தேஷ் மாவட்டம் 11,770 km2 (4,544 sq mi) மற்றும் துளே நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு மேற்கு காந்தேஷ் மாவட்டம் 14,240 km2 (5,497 sq mi) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1901 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்விரு மாவட்டங்களின் மக்கள்தொகை முறையே 9,57,728 மற்றும் 4,69,654 ஆக இருந்தது.[10] இந்திய விடுதலைக்குப் பிறகு![]() 1960-இல் மும்பை மாகாணத்தை மொழிவாரி பிரித்த போது மும்பை மாகாணம் மற்றும் குஜராத் மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. மகாராட்டிரா மாநிலத்தில் இருந்த கிழக்கு காந்தேஷ் பிரதேசத்தை ஜள்காவ் மாவட்டம் என்றும், மேற்கு காந்தேஷ் பிரதேசத்தை துளே மாவட்டம் என்று பெயரிட்டனர்.[11] பின்னர் துளே மாவட்டப் பகுதிகளைக் கொண்டு புதிய நந்துர்பார் மாவட்டம் நிறுவப்பட்டது.[3] பண்பாடுகாந்தேஷ் பிரதேசம் சிறந்த பண்பாடும், இலக்கிய மரபும் கொண்டது. கலைகள்கிபி 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தி கவிஞரும், மெய்யியலாளருமான ஞானேஸ்வரின் இளைய தங்கை முக்தா பாய் வாழ்ந்த தப்தி அற்றுப் பகுதிக்கு அருகில் யோகி சங்கதேவர் வாழ்ந்தார். காந்தேஷ் பிரதேசத்தில் உள்ள புர்ஹான்பூர் கபீர் சீடர்களின் மையமாக விளங்கியது. மராத்திய பெண் பக்தி இலக்கிய கவிஞரான பாகினாபாய் சௌதாரி காந்தேஷ் பிரதேசத்தை சேர்ந்தவர் காந்தேஷ் புவியியல் கூறுகள்நகரங்கள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia