நாசிக் மாவட்டம்
நாசிக் மாவட்டம். இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ளது.[3] இதன் தலைமையகம் நாசிக் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 15,530 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.திரியம்பகேஸ்வரர் கோயில் மற்றும் பாண்டவர் குகைகள் இம்மாவட்டதில் உள்ளது. இந்த மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் கிழக்குப் பகுதி தக்காணப் பீடபூமியில் அமைந்துள்ளது. இங்கு வளம் நிறைந்த மண் இருப்பதால், உழவுத் தொழில் முதன்மையாக விளங்குகிறது. கோதாவரி ஆறு இந்த மாவட்டத்தில் இருந்தே தொடங்குகிறது. தட்பவெப்ப நிலை
மக்கள் தொகை2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 6,109,052 மக்கள் வாழ்ந்தனர். [6] சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 393 பேர் வாழ்கின்றனர். [6] பால் விகிதத்தில், 1000 ஆண்கலுக்கு இணையாக 931 பெண்கள் உள்ளனர். [6] இங்கு வாழும் மக்களில் கல்வியறிவு பெற்றோர் 80.96% சதவீதத்தினர் ஆவர்.[6] மொழிகள்இங்கு வாழும் மக்கள் மராத்தி மொழியில் பேசுகின்றனர். [7] நாசிக், திரிம்பகேஷ்வர் போன்ற பகுதிகளில் சமசுகிருதம் பேசுவோரும் உள்ளனர். ஆட்சிப் பிரிவுகள்சான்றுகள்
இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia