காமராஜ் (திரைப்படம்)
காமராஜ் (Kamaraj) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், அரசர்களை உருவாக்குபவர் என்ற பட்டத்தைப் பெற்றவருமான காமராசரின் வாழ்க்கை வரலாற்றுப் பின்னணியில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.[1] வகைகதைகதை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய காலம், காமராசரின் குழந்தைப் பருவம், சத்தியமூர்த்தியின் செல்வாக்கு, ஓர் அரசியல்வாதியாக காமராசரின் வளர்ச்சி, அவரது சிறை வாழ்க்கை ஆகியவற்றைச் சித்தரிக்கிறது. நடிகர்கள்
பாடல்கள்இப்படத்தில் இளையராஜா இசையமைத்த ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாடல்களில் மகாகவி சுப்பிரமணிய பாரதி, வாலி, இளையராஜா ஆகியோரது வரிகள் இடம்பெற்றன.
துணுக்குகள்
விமர்சனம்இத்திரைப்படம் விருதுநகரில் உள்ள காமராசரின் தங்கை மறைந்த நாகம்மாளின் குடும்பத்தினர்களின் கருத்தையும், காமராசருடன் அவரின் தங்கை மகன்களின் அனுபவங்களையும் கேட்காமல் எடுக்கப்பட்டதால், காமராசரின் அரசியல் வாழ்க்கையைத் தவிர அவருடைய தாய், தங்கை, தங்கை மகன்கள், மகள்கள், மருமகள்கள், தங்கை பேரன்மார்கள் என பெரிய குடும்பப் பின்னணி இப்படத்தில் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது. இவற்றையும் காண்கமேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia