காரப்பட்டு
காரப்பட்டு (Karapattu) என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரப்பட்டு ஊராட்சியில் உள்ள சிறு கிராமமாகும்.[3] இந்த ஊர் ஊத்தங்கரையில் இருந்து 16 கி.மீ தொலைவிலும், மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 50 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. கிட்டதட்ட 710 குடியிருப்புகளை கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி,[4] 2925 (ஆண்கள் :1524 பெண்கள் : 1401 ) ஆகும்.[5] மக்களின் கல்வியறிவு விகிதம் 61.64% ஆகும்.[6] இந்த ஊர் தமிழ்நாட்டின் சராசரி கல்வியறிவு விகிததமான 80.09 % ஒப்பிடும்போது பின்தங்கி உள்ளது. அமைவிடம்இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. தொழில்இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில்கள் விவசாயம் மற்றும் சிறு, குறுந்தொழில்கள். இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia