காராமணிக்குப்பம் ஊராட்சி (Karamanikuppam Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கடலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2659 ஆகும். இவர்களில் பெண்கள் 1359 பேரும் ஆண்கள் 1300 பேரும் உள்ளனர்.
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் |
எண்ணிக்கை
|
குடிநீர் இணைப்புகள் |
86
|
சிறு மின்விசைக் குழாய்கள் |
1
|
கைக்குழாய்கள் |
4
|
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் |
5
|
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் |
1
|
உள்ளாட்சிக் கட்டடங்கள் |
7
|
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் |
|
ஊரணிகள் அல்லது குளங்கள் |
4
|
விளையாட்டு மையங்கள் |
1
|
சந்தைகள் |
2
|
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் |
77
|
ஊராட்சிச் சாலைகள் |
1
|
பேருந்து நிலையங்கள் |
|
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் |
2
|
காராமணிக்குப்பம் சந்தை
கடலூர் மாவட்டத்தில் காரமணிக்குமப்பத்தில் கூடும் சந்தை பிரபல்யமான. கடலூர் மாவட்டத்தில் நடக்கும் கருவாட்டு சந்தையாகும் கடலூர் நாகப்பட்டினம் போன்ற ஊர்களில் இருந்து கருவாடு இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆடு மாடு கோழி காய்கறிகள் என பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையில் இந்த சந்தை கூடுகிறது. கடலூர் பண்ருட்டி முதன்மை சாலையை ஒட்டி இந்த சந்தை அமைந்துள்ளது. தமிழர்களின் முதன்மை பண்டிகையான பொங்கலை முன்னிட்டு போகி நாளன்று போகி சந்தையும் நடக்கிறது
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
- புதுநகர்
- டி.எஸ்.நகர்
- சீத்தாராம் நகர்
- ஷண்முகா நகர்
- காராமணிக்குப்பம்
- காராமணிக்குப்பம் காலனி
சான்றுகள்