காரைக்கால் தொடருந்து நிலையம்
காரைக்கால் ரயில் நிலையம் காரைக்காலின் ரயில் போக்குவரத்திற்காக எழுப்பப்பட்டது. இது புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்காலில் உள்ளது. இது திருச்சிராப்பள்ளியில் இருந்து 145 கிலோமீட்டர்கள் (90 mi) கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து 300 கிலோமீட்டர்கள் (190 mi) தொலைவில் உள்ளது. அமைவிடம்இது கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு அருகில் உள்ளது. காரைக்கால் பேருந்து நிலையம் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து 11 கிலோமீட்டர் சென்றால் காரைக்கால் துறைமுகத்தை அடையலாம். இயக்கம்இந்த இடத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களும், வந்து சேரும் ரயில்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[1][2][3] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, காரைக்கால் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 5.37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[4][5][6] இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia