கார்பன் நான்கையோடைடு
கார்பன் நான்கையோடைடு (Carbon tetraiodide) என்பது CI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நான்கு ஆலோ மீத்தேன் வகை வேதியியல் சேர்மமாகும். பிரகாசமான சிவப்பு நிறம் கொண்ட இச்சேர்மம் வண்ணமயமான மீத்தேன் வழிப்பொருட்களுக்கு சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது. இதர மீத்தேன் வழிப்பொருட்கள் மிகக்குறைவான எடைஅளவு கார்பனை பெற்றிருந்தாலும் இச்சேர்மம் சற்றுக் கூடுதலாக 2% கார்பனின் எடையைப் பெற்றுள்ளது. இந்த நான்முகி மூலக்கூறின் தோற்றத்தில் 2.12 ± 0.02 Å.[2] என்ற இடைவெளி தொலைவுடன் C-I பிணைப்புகள் உள்ளன. குறுகிய அயோடின் – அயோடின் 3.459 ± 0.03 Å பிணைப்புகளால் இம்மூலக்கூறு சற்று நெரிசலாகக் காணப்படுகிறது. இதன்காரணமாகவே வெப்பத்திலும் ஒளியிலும் இச்சேர்மம் நிலைப்புத்தன்மை இன்றி காணப்பட வாய்ப்பு ஏற்படுகிறது. அனேகமாக இதே காரணத்தினாலேயே அறு அயோடோ ஈத்தேன் அறியப்படாமல் இருக்கலாம். கார்பன் நான்கையோடைடு நான்முக படிகவமைப்பில் (a 6.409, c 9.558 (.10−1 நானோ மீட்டர்)[3].படிகமாகிறது. சமச்சீராக நான்முக மூலக்கூறுகள் பதிலீடு செய்யப்பட்டிருப்பதால் இருமுனைத் திருப்புத்திறன் இங்கு சுழியாக உள்ளது. பண்புகள்தண்ணீருடன் CI4 வினைபுரிந்து அயோடோஃபார்ம் மற்றும் அயோடின் ஆகியனவற்றைத் தருகிறது. மற்றபடி இச்சேர்மம் முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. வெப்பம் மற்றும் ஒளியால் சிதைவடைந்து நான்கையோடோ எத்திலீனாக I2C=CI2 மாறுகிறது. தயாரிப்புஅலுமினியம் முக்குளோரைடு வினையூக்கியாகச் செயலாற்றி அறை வெப்பநிலையில் ஆலசன் பரிமாற்ற தொகுப்பு வினையின் மூலமாக கார்பன் நான்கையோடைடு தயாரிக்கப்படுகிறது. விளைபொருளான கரைசலில் இருந்து இது படிகமாகிறது:[4]
பயன்கள்காரத்துடன் கார்பன் நான்கையோடைடு வினைபுரிந்து அயோடினேற்றம் செய்யும் வினையாக்கியாக இது பயன்படுகிறது[5]. கீட்டோன்களை PPh3 மற்றும் CI4 ஆகியனவற்றுடன் சேர்ந்து 1,1- ஈரயோடோயீத்தீனாக மாற்றுகிறது. அப்பெல் வினையின் வினைவழி முறையைப் போல ஆல்ககால், அயோடைடு மாற்றம் நிகழ்கிறது. அப்பெல் வினையில் ஆல்ககாலில் இருந்து குளோரினை உருவாக்க கார்பன்நாற்குளோரைடு பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்புகார்பன் நான்கையோடைடை 0 °செ இல் சேமித்து வைக்க வேண்டுமென்று தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர். எரிச்சல் உண்டாக்கும் தன்மை இதற்கு உண்டு. இதனுடைய உயிர் போக்கும் அளவு (LD50) 178 மி.கி.கி.கி−1. ஆகும். பொதுவாக பெர்ராலசனேற்ற கரிமச் சேர்மங்கள் நச்சுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால், பெர்புளோரோ ஆல்க்கேன் மட்டும் சற்று விதிவிலக்காகக் கருதப்படுகிறது. மேற்கோள்கள்
உசாத்துணைSorros, H., Hinkam J. B., “The Redistribution Reaction. XI. Application to the Preparation of Carbon Tetraiodide and Related Halides” Journal of the American Chemical Society 1945, 67, 1643. DOI. |
Portal di Ensiklopedia Dunia