சமசயனிக் அமிலம்
சமசயனிக் அமிலம் (isocyanic acid) என்பது HNCO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். இது 1830 ஆண்டில் இலைபிக் மற்றும் பிரெடரிக் வோலர் ஆகியோரால் கண்டறியப்பட்டது.[2] நிறமற்ற இச்சேர்மம் விரைந்து ஆவியாகும் தன்மையும் நச்சுத்தன்மையும் கொண்டது ஆகும். 23.5 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது கொதிக்கத் தொடங்கும். உயிரியல் மற்றும் கரிம வேதியியலில் கார்பன், ஐதரசன், நைட்ரசன் மற்றும் ஆக்சிசன் ஆகிய நான்கு பொதுவாக அறியப்பட்டுள்ள தனிமங்களும் இணைந்து அதிக நிலைப்புத்தன்மையுடன் காணப்படுவது சமசயனிக் அமிலம் ஆகும். தயாரிப்பு மற்றும் வினைகள்பொட்டாசியம் சயனேட்டு போன்ற சேர்மங்களிலுள்ள சயனேட்டு எதிரயனியை வளிம நிலையிலுள்ள ஐதரசன் குளோரைடு அல்லது ஆக்சாலிக் அமிலத்தின் உதவியினால் புரோட்டானேற்றம் செய்து சமசயனிக் அமிலத்தைத் தயாரிக்கலாம்.[3]
உயர் வெப்பநிலைகளில் முப்படிச் சேர்மமான சயனூரிக் அமிலத்தை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தியும் சமசயனிக் அமிலத்தைத் தயாரிக்கலாம்.
சமசயனிக் அமிலம் நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு கார்பனீராக்சைடு மற்றும் அமோனியாவாக பிரிகிறது.
போதுமான அடர்த்தி கொண்ட சமசயனிக் அமிலம் சில்படிமமாதல் வினையில் ஈடுபட்டு சயனூரிக் அமிலம் மற்றும் சையமெலைடு என்ற பல்லுறுப்பிகளைத் தருகிறது. இச்சேர்மங்கள் வழக்கமாக திரவ அல்லது வளிம நிலை வினை விளை பொருட்களாகப் பிரித்தெடுக்கப்படும். ஈதர் மற்றும் குளோரினேற்றம் செய்யப்பட்ட ஐதரோகார்பன்கள்[4] போன்ற வினைத்திறன் குறைந்த கரைப்பான்களில் கரைக்கப்பட்ட சமசயனிக் அமிலம் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. இது அமீன்கள்Iஅமீன்களுடன் வினைபுரிந்து கார்பமைடுகள் எனப்படும் யூரியாவைத் தருகிறது.
இவ்வினை கார்பமைடேற்றம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. எலக்ட்ரான்கள் மிகுந்துள்ள வினைல் ஈதர்களுடன் சமசயனிக் அமிலம் வினைபுரிந்து அவற்றுடன் தொடர்புடைய சமசயனேட்டுகளைத் தருகிறது. சமசயனிக் அமிலம் பனிப்புகை, சிகரெட் புகை போன்ற வெவ்வேறு வகையான புகை வடிவங்களில் இடம்பெற்றுள்ளது. பொருண்மை நிரல் ஆய்வு முடிவுகள்[5] இதை உறுதிப்படுத்துகின்றன. இச்சேர்மம் எளிதாக நீரில் கரைந்து நுரையீரல் பாதிப்புகளை உண்டாக்கி உடல்நலக் கேட்டை விளைவிக்கும். சமபகுதியம்: சயனிக் அமிலமும் பல்மினிக் அமிலமும்சமசயனிக் அமிலம் கொண்டுள்ள திடப்பொருட்களின் தாழ்வெப்பநிலை ஒளிச்சிதைவு வினை சயனிக் அமிலம் அல்லது ஐதரசன் சயனைடின் இருப்பைக் காட்டுகிறது. இது சமசயனிக் அமிலத்தின் இயங்குச் சமநிலைப்படியாகும்.[6] தூய்மையான சயனிக் அமிலத்தைத் தனிமைப்படுத்த முடியாத காரணத்தால் பெரும்பாலும் சமசயனிக் அமிலமே வினைகளுக்கான கரைப்பானாகப் பயன்படுகிறது.[4] மேற்கோள்களுக்காகப் நூல்களைப் பார்வையிடும்போது கூறப்பட்டிருப்பது சமசயனிக் அமிலம்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. சயனிக் அமிலமும் சமசயனிக் அமிலமும் நிலைப்புத்தன்மையற்ற சேர்மமான பல்மினிக் அமிலத்தினுடைய சமபகுதியங்கள் ஆகும்[7]. மேற்கோள்கள்
இவற்றையும் காண்கஉசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia