காற்றெதிர் அண்டிலிசு

காற்றெதிர் அண்டிலிசின் நிலப்படம்

லீவர்டு அண்டிலிசு (Leeward Antilles, டச்சு: Benedenwindse Eilanden) அல்லது காற்றெதிர் அண்டிலிசு அல்லது வளிமறைவு அண்டிலிசு கரிபியனிலுள்ள சில தீவுகள் ஆகும். குறிப்பாக, சிறிய அண்டிலிசின் தெற்கத்தியத் தீவுகளாகும். இவை கரிபியக் கடலின் தென்கிழக்கு விளிம்பில் தென் அமெரிக்க தலைநிலத்தின் வெனிசுவேலாக் கடற்கரையின் வடக்கே உள்ளன. காற்றெதிர் அண்டிலிசு தீவுகள் சிறிய அண்டிலிசு தீவுக் குழுவின் அங்கமாக இருந்தபோதும் இதனுடன் அதே சிறிய அண்டிலிசின் அங்கமாக வடகிழக்கிலுள்ள காற்றெதிர் தீவுகளுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது.

எரிமலைச் செயற்பாடில்லாத பகுதியில், காற்றெதிர் அண்டிலிசு தீவு வளைவு கரிபியன் புவித்தட்டின் சிதைந்த தெற்கு விளிம்பில் அமைந்துள்ளது. இவை தென் அமெரிக்கப் புவித்தட்டின் கீழ் கரிபியன் புவித்தட்டு கீழமிழ்தலால் உருவானவை. அண்மைய ஆய்வுகளின்படி காற்றெதிர் அண்டிலிசு தென் அமெரிக்காவுடன் கூடுகின்றது.

தீவுகள்

காற்றெதிர் அண்டிலிசின் அங்கமாக உள்ளத் தீவுகள் (தோராயமாக மேற்கிலிருந்து கிழக்காக):

ஆட்புலம்
தலைநகரம் நாணயம் மொழி நிர்வாக மாநிலம் வலயம் குறிப்புகள்
 அரூபா ஒரானியெசுத்தாடு அருபன் பிளோரின் டச்சு மொழி  நெதர்லாந்து கரிபியன்
 குராசோ வில்லெம்ஸ்டாடு நெதர்லாந்து அண்டிலிய கில்டர் டச்சு மொழி  நெதர்லாந்து கரிபியன் கிளைன் குராசோ உட்பட
 பொனெய்ர் Kralendijk அமெரிக்க டாலர் டச்சு மொழி  நெதர்லாந்து கரிபியன் கிளைன் பொனைய்ர் உட்பட
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya