சிறிய அண்டிலிசு![]() சிறிய அண்டிலுசு அல்லது கரிபீஸ் [1] அண்டிலுசுவின் ஒரு பகுதியாகும். சிறிய அண்டிலிசு, பெரிய அண்டிலிசு, பகாமாசு என்பவை கூட்டாக மேற்கிந்தியத் தீவுகளை ஆக்குகினறன. சிறிய அண்டிலிசில் காணப்படும் தீவுகள் நீண்ட எரிமலை வில்லை ஆக்குகின்றன, இவற்றுள் பெரும்பாலான தீவுகள் கரிபியக் கடலின் கிழக்கு எல்லையில் அட்லாண்டிக் பெருங்கடலுடானான மேற்கு எல்லையில் அமைந்துள்ளன. சிலத் தீவுகள் தென் அமெரிக்காவிற்கு சற்றே வடக்கே அமைந்துள்ளன. சிறிய அண்டிலுசு கரிபிய புவியோட்டை ஒத்துப் போகின்றது இத்தீவுகளில் பெரும்பான்மையானவை ஒன்று அல்லது ஒன்றுக்க்கு மேற்பட்ட புவியோடுகள் கரிபிய புவியோட்டுக்கு கீழாக நகர்வதன் மூலம் உருவாக்கப் பட்டவையாகும். பிராந்திய பெயரீடுகள்சிறிய அண்டிலிசின் தீவுக் கூட்டங்கள் தெற்கே காணப்படும் காற்றுமுகத் தீவுகள் மற்றும் வடக்கே காணப்படும் காற்றெதிர்த் தீவுகள் என இரண்டு முக்கிய குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. ஐரோப்பாவிலிருந்து பருவக்காற்றுகளின் உதவியுடன் இங்கு வந்த ஆரம்ப கப்பல்கள் காற்றெதிர் தீவுகளை விட அதிகமாக காற்றுமுகத் தீவுகளை அடைந்தமை இப்பெயரீடுகளுக்க்கு காரணமாக அமைந்தது. வெனிசூலாவின் கரையருகே காணப்படும் தீவுகள், காற்றெதிர் தீவுகளில் காணப்படும் ஒரு தீவு என இரண்டாகப் பிர்க்கப்பட்டுள்ள நெதர்லாந்து அண்டிலுசும் சிறிய அண்டிலிசின் ஒரு பகுதியாகும். தீவுகள்முக்கியத் தீவுகள்: செயிண்ட் தாமஸ், செயிண்ட் தாமஸ்,
காற்றெதிர் அண்டிலிசு – வெனிசுவேலாக் கரைக்கு வடக்கேயுள்ள தீவுகள் (மேற்கிலிருந்து கிழக்காக):
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia