கால்சியம் ஆக்சலேட்டு
![]() ![]() கால்சியம் ஆக்சலேட்டு (Calcium oxalate) என்பது CaC2O4•(H2O)x, என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். இங்கு x இன் மதிப்பு 0 முதல் 3 வரை மாறுபடுகிறது. தொன்மையான பயன்பாட்டில் இதை சுண்ணாம்பு ஆக்சலேட்டு என்ற பெயரில் அழைத்தார்கள். ஆக்சலேட்டின் கால்சியம் உப்பே கால்சியம் ஆக்சலேட்டு என்றும் கருதப்படுகிறது. அனைத்து வடிவங்களும் நிறமற்றவையாக அல்லது வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. ஒற்றை நீரேற்று வடிவ கால்சியம் ஆக்சலேட்டு இயற்கையில் வீவெல்லைட்டு என்ற கனிமமாக உறை வடிவ படிகங்களாகத் தோன்றுகிறது. தாவரங்களில் இது ரேபைடுகள் என்ற ஊசிவடிவத்திலுள்ள படிகங்களாக அறியப்படுகிறது. அரிய வகை இருநீரேற்று வடிவம் வெட்டெல்லைட்டு என்ற கனிம்மாகவும் முந்நீரேற்று வடிவம் காவாக்சைடு என்ற கனிமமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கால்சியம் ஆக்சலேட்டுகள் மனித சிறுநீரக கற்களின் முக்கிய அங்கமாகும். இதேபோல கால்சியம் ஆக்சலேட்டு மதுவகையான பியரிலும் பியர் கல்லாக அம்மதுபானம் பயன்படுத்தப்படும் கொள்கலன்களில் உருவாகிறது. தோற்றம்பல தாவரங்களில் கால்சியம் ஆக்சலேட்டு திரண்டு குவிகிறது [2]. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான தாவரங்களில் இது இருப்பதாக பதிவாகியுள்ளது. கால்சியம் ஆக்சலேட்டின் குவிப்பு தாவரங்களில் உள்ள கால்சியம் (Ca2+ ) நச்சுத்தன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது [3]. மெக்சிகோ, மேற்கு இந்தியத் தீவுகள் போன்ற நாடுகளில் காணப்படும் நச்சுத் தாவரமான ஊமை கரும்பு எனப்படும் டிஃபென்பாச்சியா வில் கால்சியம் ஆக்சலேட்டு ஊசி வடிவத்தில் குவிந்துள்ளது.. இத்தாவரத்தை உட்கொள்ள நேரிட்டால் பேச்சிழப்பும் மூச்சுத் திணறலும் ஏற்படலாம். சோரெல் எனப்படும் குட்டைப் புதர்ச் செடி , ருபார்ப் (இலைகளில் பெரிய அளவில்), இலவங்கப்பட்டை, மஞ்சள் மற்றும் பூக்கும் தாவர வகை ஆக்சலிசு, அராசியே, ஆரம் இத்தாலிகம், சேம்பு, கிவி பழம், தேயிலை இலைகள், நீலக்கத்தாழைகள், வர்ச்சினிய படர்கொடி பார்த்தினோசிசசு குயின்கியுபோலியா , மற்றும் அலோகாசியா குடுபத் தாவரங்கள் மற்றும் கீரையில் மாறுபட்ட அளவுகளில். பிலோடென்ட்ரான் இனம் போன்ற தாவரங்களில் போதுமான அளவு கால்சியம் ஆக்சலேட் உள்ளது, இந்த தாவரங்களின் பாகங்களை உட்கொள்வது சங்கடமான அறிகுறிகளை ஏற்படுத்தும். கரையாத கால்சியம் ஆக்சலேட் படிகங்கள் தாவர தண்டுகள், வேர்கள் மற்றும் இலைகளில் காணப்படுகின்றன மற்றும் இடியோபிளாசுட் செல்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. கால்சியம் ஆக்சலேட், 'பியர் கல்லில் , பழுப்பு நிற வீழ்படிவாகக் காணப்படுகிறது. இது கொப்பரைகள் , பீப்பாய்கள் மற்றும் பீர் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் பிற கொள்கலன்களில் குவிந்துவிடும். துப்புரவு பணி மூலம் இது அகற்றப்படாவிட்டால், பீர்கல் நுண்ணுயிரிகளை அடைக்கக்கூடிய ஒரு சுகாதாரமற்ற மேற்பரப்பு உருவாகிவிடும் [4]. பீர் கல்லில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புகள் மற்றும் காய்ச்சும் செயல்முறையில் எஞ்சியுள்ள பல்வேறு கரிம சேர்மங்களால் ஆனது; இது தேவையற்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, அவை பாதிக்கப்பட்ட தொகுதியின் பீர் சுவையை மோசமாக பாதிக்கலாம் அல்லது அழிக்கலாம். சிறுநீரில் உள்ள கால்சியம் ஆக்சலேட்டு படிகங்கள் மனித சிறுநீரகக் கற்களின் மிகவும் பொதுவான ஓர் அங்கமாகும், மேலும் கால்சியம் ஆக்சலேட் படிக உருவாக்கம் எத்திலீன் கிளைக்கா; நச்சுத்தன்மையின் நச்சு விளைவுகளில் ஒன்றாகும். வேதிப்பண்புகள்கால்சியம் ஆக்சலேட்டு என்பது கால்சியம் அயனிகள் மற்றும் ஆக்சாலிக் அமிலத்தின் இணை காரம் ஆகியவற்றின் கலவையாகும். ஆக்சலேட்டு அயனியின் காரத்தன்மை காரணமாக இதன் நீர்த்த கரைசல் இலேசான காரப்பண்புகளை வெளிப்படுத்துகிறது. சேர்மத்தின் கரைதிறன் காரணமாக, சோடியம் ஆக்சலேட்டு காரத்தை விட இது பலவீனமானது ஆகும். மருத்துவ முக்கியத்துவம்கால்சியம் ஆக்சலேட்டு உட்கொள்ல நேரிட்டால் உணர்ச்சியற்றுப் போதல், புண் உண்டாதல் மற்றும் மரண ஆபத்தாகவும் இருக்கலாம். உருவவியல் மற்றும் நோயறிதல்கால்சியம் ஆக்சலேட்டின் ஒற்றைநீரேற்றையும் இருநீரேற்றையும் அந்தந்த படிகங்களின் வடிவத்தால் வேறுபடுத்தலாம். •கால்சியம் ஆக்சலேட்டு இருநீரேற்றுப் படிகங்கள் எண்முகப் படிகங்களாகும்.. . சிறுநீரில் உள்ள படிகங்களின் பெரும்பகுதி இந்த வகை உருவ அமைப்பைக் கொண்டிருக்கும், ஏனெனில் அவை எந்த அமிலக்கார குறியீட்டு அளவிலும் வளரமுடியும் மற்றும் இயற்கையாகவே சாதாரண சிறுநீரில் தோன்றும். •கால்சியம் ஆக்சலேட் ஒற்றைநீரேற்றுப் படிகங்கள் வடிவத்தில் வேறுபடுகின்றன, மேலும் அவை பிரடை வடிவம், சுழல் கம்பி வடிவம், முட்டை வடிவம் அல்லது மறிக்கும் வேலிகள் போன்ற வடிவங்களில் உருவாகலாம். இஅவற்றில் கடைசியாக கூறப்பட்ட வடிவம் எத்திலீன் கிளைக்கால் நச்சு காரணமாக பொதுவாகக் காணப்படுகிறது[5]. •கணவர் மற்றும் காதலன் இருவருக்கும் எத்திலீன் கிளைக்கால் அடிப்படையிலான உறைதல் தடுப்பு நஞ்சை கொடுத்து கொலை செய்த ஓர் அமெரிக்கக் கொலையாளியான லின் டர்னர் மீது வெற்றிகரமாக வழக்குத் தொடரவும், தண்டனை பெறவும் சிறுநீரகப் புலனாய்வில் கண்டறியப்பட்ட கால்சியம் ஆக்சலேட்டு பயன்பட்டது[6].
சிறுநீரகக் கற்கள்கால்சியம் ஆக்சலேட்டு ஒற்றை நீரேற்றுப் படிகங்கள். சுமார் 80% சிறுநீரக கற்கள் ஓரளவு அல்லது முழுமையாக கால்சியம் ஆக்சலேட்டு வகையைச் சேர்ந்தவையாகும். சிறுநீரில் தொடர்ந்து கால்சியம் மற்றும் ஆக்சலேட்டு நிறைவுறும் போது அவை உருவாகின்றன. சிறுநீரில் உள்ள சிறிதளவு ஆக்சலேட்டு உடலால் உற்பத்தி செய்யப்படுகிறது. உணவில் உள்ள கால்சியமும் ஆக்சலேட்டும் இதிலொரு பங்கைக் கொண்டுள்ளன. ஆனால் கால்சியம் ஆக்சலேட்டு கற்களின் உருவாக்கத்தை பாதிக்கும் காரணிகள் இவை மட்டுமல்ல. உணவுத்திட்ட ஆக்சலேட்டு என்பது பல காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டைகளில் காணப்படும் ஒரு வகையான கரிம அயனியாகும். எலும்பிலிருந்து வரும் கால்சியம் சிறுநீரக கல் உருவாவதிலும் பங்கு வகிக்கலாம். தொழில்துறை பயன்பீங்கான் மெருகூட்டிகள் உற்பத்தியில் கால்சியம் ஆக்சலேட் பயன்படுத்தப்படுகிறது[7]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia