கால்சியம் அசிட்டேட்டு
கால்சியம் அசிட்டேட்டு (Calcium acetate) என்பது Ca(C2H3O2)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட அசிட்டிக் அமிலத்தின் (CH3COOH) கால்சியம் உப்பாகும். இதனுடைய முறைப்படியான பெயர் கால்சியம் எத்தனோயேட்டு என்றாலும் இது கால்சியம் அசிட்டேட்டு என்ற பொதுப் பெயராலேயே வழங்கப்படுகிறது. முற்காலத்தில் சுண்ண அசிட்டேட்டு என்ற பழைய பெயராலும் அழைக்கப்பட்டது. நீரிலி வடிவ கால்சியம் அசிட்டேட்டின் நீர் உறிஞ்சும் தன்மை மிகவும் அதிகம் என்பதால் ஒற்றை நீரேற்று வடிவமே (Ca(CH3COO)2•H2O) நீரிலியாக கொள்ளப்படுகிறது. தயாரிப்புபொதுவான கார்பனேட்டு பாறைகள் அல்லது சுண்ணாம்புக்கல் அல்லது மார்பிள் அல்லது முட்டை ஓடுகளில் உள்ள கால்சியம் கார்பனேட்டை ஊற வைத்து அல்லது நீர்த்த சுண்ணாம்பை வினீகரில் ஊற வைத்து கால்சியம் அசிட்டேட்டு தயாரிக்கலாம்.
இரண்டு வினைப்பொருட்களும் பண்டைக்காலத்தில் இருந்தே கிடைக்கப் பெறுகிறது என்றாலும் இவை படிகவடிவ வேதிப்பொருட்கள் எனப் பின்னரே அறியப்பட்டன. பயன்கள்• சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் பாசுபேட்டு அளவு அதிகரிக்கும் போது எலும்புகள் பாதிப்படைகின்றன. கால்சியம் அசிட்டேட்டு உணவிலுள்ள பாசுபேட்டை பிணைத்து இரத்த பாசுபேட் அளவைக் கட்டுபடுத்துகிறது. • உணவுக் கூட்டுப்பொருளாக, நிலைநிறுத்தியாக, இடைத்தாங்கலாக உலோக அயனியாக E263 என்ற குறியீட்டுப் பெயருடன் குறிப்பாக இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் கலந்த புளோரைடையும் இது நடுநிலையாக்குகிறது[2]. • மலிவாகக் கிடைக்கும் என்பதால் கமீன் செயல்முறை வளர்ச்சியடையும் வரையிலும் அசிட்டோனை தொகுப்பு முறையில் தயாரிக்க இதுவே மூலப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது:[3][4] .
• ஆல்ககாலில் கரைக்கப்பட்ட கால்சியம் அசிட்டேட்டின் நிறைவுற்ற கரைசல் அரை திண்ம நிலையில் உள்ள எரிதகு கூழ்ம ஆல்ககாலாக உருவாகிறது[5] . • கால்சியம் அசிட்டேட்டை எத்தனாலுடன் கலந்தால் வெண்மையான கூழ்ம பனித்திறள் போல உருவாகும்[6]. வகுப்பறைகளில் வேதியியல் ஆசிரியர்கள் இதைப் பனிப்பந்து என உருவாக்கி விளக்குவர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia