இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு
இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு (Strontium oxalate) என்பது SrC2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும் . ஒரு நீரேற்று வடிவிலோ (SrC2O4•nH2O) அல்லது ஓர் இசுட்ரோனியம் ஆக்சலேட்டின் அமில உப்பாகவோ இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு இயற்கையில் காணப்படுகிறது [1]. வான வெடிமுறைப் பயன்கள்இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு சூடுபடுத்தும்போது சிதைவடைகிறது [2] SrC2O4 → SrO + CO2 + CO. வெப்பத்துடன் கொண்டுள்ள இச்சிதைவடையும் பண்பினால் வானவெடிச் செயல்முறைகளுக்கு உகந்த ஒரு முகவராக இது பயன்படுத்தப்படுகிறது. இசுட்ரோன்சியம் ஆக்சைடாக சிதைவடையும் போது இவ்வினையில் சிவப்பு நிறம் உருவாகிறது. வினையில் உருவாகும் கார்பனோராக்சைடு மக்னீசியம் ஆக்சைடுடன் சேர்ந்து மேலும் ஒடுக்கமடைகிறது. மக்னீசியத்தின் முன்னிலையில் இசுட்ரோன்சியம் ஆக்சலேட்டு ஒரு சிறந்த சிவப்பு நிற உற்பத்தி முகவராக செயல்படுகிறது. மக்னீசியம் பயன்படுத்தப்படாத நிலையில் இதே வினைக்கு இசுட்ரோன்சியம் கார்பனேட்டு ஒரு நல்ல மாற்றாகப் பயன்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia