கால்சியம் பெராக்சைடு
கால்சியம் பெராக்சைடு (Calcium peroxide) என்பது CaO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் ஈராக்சைடு, கால்சியம் டையாக்சைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. கால்சியத்தின் Ca2+. பெராக்சைடு (O22−) உப்பாக இது கருதப்படுகிறது. வணிக மாதிரிகள் மஞ்சள் நிறமாக இருக்கலாம், ஆனால் தூய சேர்மம் வெண்மையானது. கால்சியம் பெராக்சைடு தண்ணீரில் கிட்டத்தட்ட கரையாது.[3] கட்டமைப்புஒரு திடப்பொருளாக, கால்சியம் பெராக்சைடு சிதைவுக்கு எதிராக ஒப்பீட்டளவில் நிலையானது. தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது நீராற்பகுப்பு அடைந்து ஆக்சிசனை வெளியிடுகிறது. அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தினால் ஐதரசன் பெராக்சைடை உருவாக்குகிறது. தயாரிப்புகால்சியம் பெராக்சைடு கால்சியம் உப்புகளுடன் ஐதரசன் பெராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் கால்சியம் பெராக்சைடு தயாரிக்கப்படுகிறது.
கால்சியம் ஐதராக்சைடுடன் நீர்த்த ஐதரசன் பெராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கால்சியம் பெராக்சைடின் எண்ணீரேற்று வீழ்படிவாகிறது. சூடுபடுத்தினால் இது நீர்நீக்கத்திற்கு உட்படுகிறது. பயன்கள்விலைமதிப்பற்ற உலோகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுப்பதை மேம்படுத்த இது முக்கியமாக ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் இரண்டாவது முக்கிய பயன்பாட்டில், இது ஐ எண் ஐ930 என்ற குறியீட்டுடன் உணவு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மாவு வெளுக்கும் முகவராகவும் மேம்படுத்தும் முகவராகவும் கால்சியம் பெராக்சைடு பயன்படுத்தப்படுகிறது.[3] விவசாயத்தில் நெல் விதைகளை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்ய கால்சியம் பெராக்சைடு பயன்படுத்தப்படுகிறது. மேலும், மீன் வளர்ப்பில் நீரை ஆக்சிசனேற்றம் செய்யவும் கிருமிநீக்கம் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு துறையில் இது மண் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு மக்னீசியம் பெராக்சைடுக்கு ஒத்த முறையில் இது பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோலியத்தால் மாசுபடுத்தப்பட்ட மண் மற்றும் நிலத்தடி நீரை மேம்படுத்தப்பட்ட தளத்தில் உயிரியல் திருத்தம் மூலம் மீட்டெடுக்கவும் இது பயன்படுகிறது. சில பல் மருந்துகளின் உட்கூறாகவும் இது உள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia