காளையார்கோயில் (நகரம்)

காளையார்கோயில்
—  நகரம்  —
காளையார்கோயில்
அமைவிடம்: காளையார்கோயில், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°50′44″N 78°38′14″E / 9.8456285°N 78.6371219°E / 9.8456285; 78.6371219
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

காளையார்கோயில் (ஆங்கிலம்:KalayarKovil) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.[4][5] காளையார்கோவில் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

இவ்வூரின் சிறப்பு

இங்கு காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் எனும் பிரபலமான சிவன் கோவில் உள்ளது.

திருக்கானப்பேரூர் [6]காளையார்கோவில், சோமநாதமங்கலம் பரணிடப்பட்டது 2011-08-31 at the வந்தவழி இயந்திரம் (மறுபெயர்) சம்பந்தர் , சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இறைவன் காளை வடிவங்கொண்டு கையில் பொற்செண்டும் திருமுடியிற் சுழிதும்கொண்டு சுந்தரருக்குக்காட்சி தந்தார் என்பது தொன்நம்பிக்கை.

கோயிலின் இரட்டைக்கோபுரம், தெப்பக்குளம், வேதாந்தமடம், முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர் சமாதியும், பாண்டியன்கோட்டை மற்றும் மருது பாண்டியர் சமாதி இவ்வூரின் சிறப்பாகும்.

திருஞான சம்பந்தர் பாடல்

இவ்வூர்ச் சிவபெருமான் மீது திருஞானசம்பந்தர் 11 பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் முதல் இரண்டு பாடல்களை இங்குக் காணலாம். [7]

அமைவிடம்

மதுரை-தொண்டி சாலையில் சிவகங்கையிலிருந்து கிழக்கே 18 கி.மீ

திருச்சி-பரமக்குடி சாலையில் காரைக்குடிக்கு தெற்கே 35கி.மீ உள்ளது

காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் வெளித்தோற்றம்
கோயிலின் உட்தோற்றம் (கன்னிமூலை)

இங்கு உள்ள அரசு அலுவலங்கள்

காளையார்கோயிலில் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் சார்நிலை கருவூலகம்,ஊட்டச்சத்து அலுவலகம், தாலுகா மருத்துவமனை, தமிழ்நாடு மின்சார வாரியம், காவல் நிலையம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம், மத்திய அரசின் பஞ்சாலை, துணை அஞ்சலகம் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், எல்ஐசி அலுவலகம்,தனியார் கல்லூரி அமைந்துள்ளன.

பொருளாதாரம்

விவசாயம் பிரதான தொழில், நெல், நிலக்கடலை இங்கு விளையும் முக்கிய பயிர்கள். கடலை உடைப்பு ஆலைகள், காளீஸ்வரர் நூற்பாலை பள்ளிகள்(தேசிய பஞ்சாலைக் கழகம்) ஆகியன இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம்.

போக்குவரத்து வசதிகள்

காளையார்கோவிலிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு பஸ் வசதி உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருப்பூர், சிதம்பரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கும்பகோணம், திருச்செந்துர்,பழனி, குமுளி பட்டுக்கோட்டை இராமநாதபுரம், கொடைக்கானல் போன்ற நெடுந்தூர பேருந்துகளும், காரைக்குடி, பரமக்குடி, சிவகங்கை, தேவக்கோட்டை, தொண்டி, முதுகுளத்தூர், மானாமதுரை, திருப்பத்தூர் போன்ற பகுதிகளுக்கும் காளையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பல பகுதிகளுக்கு நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=23&centcode=0004&tlkname=Sivaganga%20%20332304[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-04-06.
  6. சோமநாதமங்கலம்
  7. திருஞானசம்பந்தர் தேவாரம்
    திருக்கானப்பேர் - பண் கொல்லி
    பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
    விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடுங்
    கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்
    அடியலால் அடைசரண் உடையரோ அடியரே 3.26 1

    நுண்ணிடைப் பேரல்குல் நூபுரம் மெல்லடிப்
    பெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான்
    கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்
    விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே 3.26 2

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya