காவல்துறைத் துணைத்தலைவர்காவல்துறைத் துணைத்தலைவர் (சுருக்கமாக டிஐஜி, Deputy inspector general of police ) என்பது வங்களதேசம், இந்தியா, கென்யா, மலேசியா, நேபாளம், பாக்கித்தான், நைஜீரியா, இலங்கை ஆகிய நாடுகளில் காவல்துறையில் உள்ள ஒரு உயர் பதவியாகும். இந்தியா![]() காவல்துறைத் துணைத்தலைவர் (டிஐஜி) என்பது இந்திய காவல்துறையில், காவல்துறைத் தலைவருக்கு அடுத்து கீழே உள்ள பதவியாகும். காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது காவல் துணைக் ஆணையராக (தேர்வு நிலை தரம்) பதவியில் பணிபுரிந்த இந்தியக் காவல் பணி அதிகாரிகள் இப்பதவிக்கு உயர்த்தப்படுகின்றனர். டிஐஜி தரவரிசையில் உள்ள அதிகாரிகள் தங்கள் காலரில் கோர்ஜெட் பேட்ச்களை அணிந்துகொள்கின்றனர். அவை அடர் நீல நிற பின்னணி மற்றும் அதன் மீது தைக்கப்பட்ட வெள்ளைக் கோடு இடப்பட்டிருக்கும்.[1] எஸ்எஸ்பிகளைப் போலவே ஒரு மாநிலத்தில் இருக்கவேண்டிய காவல்துறைத் துணைத்தலைவர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் பல காவல்துறைத் துணைத்தலைவர்கள் உள்ளனர்.[1][2][3] காவல்துறைத் துணைத்தலைவர்களுக்கு 4ஆம் ஊதியக் குழுவின் படி ( ₹37,400 (ஐஅ$440) முதல் ₹67,000 (ஐஅ$780) ) வரையும், தர நிலை ஊதியமாக ₹8,900 (ஐஅ$100) வரை இருக்கும்.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia