கிம் கர்தாசியன்

கிம் கர்தாசியன்
கனடாவின் சாண்டா மோனிக்காவில், மேக்சிம்மின் 10 ஆவது ஆண்டு ஹாட் 100 கொண்டாட்டத்தில் கிம் கர்தாசியம்- 2009, மே 13.
பிறப்புகிம்பர்லி நோயல் கர்தாசியன்
அக்டோபர் 21, 1979 (1979-10-21) (அகவை 45)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
தேசியம்அமெரிக்கர்
பணிதொழில் முனைவோர், நடிகை, ஆடையலங்கார மாதிரி, சமூக சேவையாளர்.
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்பொழுது வரை
அறியப்படுவதுஉண்மைத் தொலைக்காட்சித் தொடரான "கீப்பிங் அப் வித் த கர்தாசியன்ஸ்"
உயரம்அடி 2.5 அங் (1.59 m)
பெற்றோர்(கள்)ராபர்ட் கர்தாசியான்
கிறிஸ் ஜென்னர்
உறவினர்கள்கோர்ட்னி கர்தாசியன்
க்ளோ கர்தாசியன்
ராபர்ட் கர்தாசியன் ஜூனியர்.]]
கைலீ ஜென்னர்
கெண்டல் ஜென்னர்
பூர்ட் ஜென்னர்
கேசி ஜென்னர்
பிரான்டன் ஜென்னர்
ப்ராடி ஜென்னர்
வலைத்தளம்
www.kimkardashian.celebuzz.com

கிம்பர்லி நோயல் கர்தாசியன் (பிறப்பு: அக்டோபர் 21,1980) ஒரு அமெரிக்க ஊடக ஆளுமையும், சமூக ஆர்வலரும், தொழிலதிபரும் ஆவார். பாரிஸ் ஹில்டனின் நண்பராகவும் ஒப்பனையாளராகவும் அவர் முதன்முதலில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார், ஆனால் 2003 ஆம் ஆண்டில் தனது அப்போதைய காதலன் ரே ஜே உடன் படமாக்கப்பட்ட கிம் கர்தாஷியன்: சூப்பர்ஸ்டார் என்ற பெயரில் ஓர் ஆபாசப்படம் 2007 இல் வெளியான பிறகு பரந்த கவனத்தைப் பெற்றார்.[1] அந்த ஆண்டின் பிற்பகுதியில், அவரும் அவரது குடும்பத்தினரும் ஈ! என்ற உண்மை வாழ்க்கைத் தொலைக்காட்சித் தொடரில் தோன்றத் தொடங்கினர். மற்றொரு உண்மைத் தொடரான கர்தாசியனுடன் தொடர்ந்திருங்கள் என்ற தொடர் 2021 வரை ஒளிபரப்பப்பட்டது. அதன் வெற்றியைத் தொடர்ந்து கோர்ட்னி அன்ட் கிம் டேக் நியூயார்க், கோர்ட்னி அன்ட் கிம் டேக் மியாமி ஆகியவையும் அதன் தொடர்ச்சியாக ஹுலு தி கர்தாசியன்ஸ் (2022 முதல் தற்போது வரை) உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார்.

இவரது சகோதரிகளான கோர்ட்னி மற்றும் க்ளோ ஆகியோரும் ஊடகத்துறை பிரபலங்கள் ஆவர். கிம் கர்தாசியான் டாஷ் என்ற ஓர் சங்கிலித் தொடர் ஆடைஅலங்கார நிறுவனத்தைத் தொடங்கினார். இது 2006 முதல் 2018 வரை இயங்கியது.[2] கர்தாஷியன் 2017 ஆம் ஆண்டில் கே. கே. டபிள்யூ பியூட்டி, கே. கே. டபிள்யூ ஃப்ராக்ரன்ஸ் ஆகியவற்றை நிறுவினார், இவை இரண்டும் 2022 வரை இயங்கின-முந்தையது 2021 ஆம் ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டது.[3][4] பின்னர் 2019 ஆம் ஆண்டில் வடிவமைப்புக்கான உள்ளாடைகள், ஆடை நிறுவனமான ஸ்கிம்ஸை நிறுவினார், இதன் மதிப்பு 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி 4 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும்.[5] தனது அழகுசாதனப் பொருட்கள் மற்றும் நறுமனப்பொருள்கள் தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, கிம் கர்தாசியன் தனது தோல் பராமரிப்பு நிறுவனமான ஸ்கின் என்பதனை 2022 இல் நிறுவினார்.[6] இவருடைய பெயரில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த கிம் கர்தாசியன் : ஹாலிவுட் என்ற அலைபேசி விளையாட்டு உட்பட பல்வேறு தயாரிப்புகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் 2015 இல் செல்பிஷ் என்ற புகைப்பட புத்தகம், 2015 இல் உணர்வுச் சின்னங்கள்(ஈமோஜி) செயலியான கிமோஜி ஆகியவையும் அடங்கும். இவர் டிசாஸ்டர் மூவி (2008),டெம்ப்டேஷன்: கன்பெஷன்ஸ் ஆப் எ மேரேஜ் கவுன்சிலர் (2013), பாவ் பட்ரோல் என்ற இரண்டு தொடர் திரைப்படங்கள் (2021 மற்றும் 2023), அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி (2023-2024) என்ற மர்மத் தொடர்களின் தொகுப்பு ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.[7]

டைம் (இதழ்) 2015 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க நூறு நபர்களின் பட்டியலில் கிம் கர்தாசியனைச் சேர்த்தது.[8] 2023 ஆம் ஆண்டில் பார்ச்சூன் இதழின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக இவர் குறிப்பிடப்பட்டார்.[9] இணையத்தில் குறிப்பிடத்தக்க இருப்பு மற்றும் ஏராளமான சமூக ஊடக தளங்களில் அதிகமாகப் பின் தொடரப்படுபவராகவும், இன்ஸ்டாகிராமில் அதிகமாகப் பின்தொடரும் ஏழாவது நபராகவும், ட்விட்டரில் அதிகமாகப் பின்தொடரப்படும் பதினொன்றாவது நபராகவும் உள்ளார்.[10][11][12] விமர்சகர்களும் இரசிகர்களும் கர்தாசியனை பிரபலமாக இருப்பதன் மூலம் பிரபலமானவர் என்ற கருத்தை எடுத்துக்காட்டுவதாக வர்ணித்துள்ளனர்.[13]அவர் 2021 இல் மிகப்பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.[14] மேலும் போர்ப்ஸ் இதழ் மே 2025 நிலவரப்படி 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையவர் என்று இவரை மதிப்பிட்டுள்ளது. சிறை சீர்திருத்தம் மற்றும் கருணைக்காக பரப்புரை செய்வதன் மூலம் கர்தாசியன் அரசியல் ரீதியாகவும் செயல்படுகிறார்.[15] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, கட்50 என்ற இலாப நோக்கமற்ற சட்ட நிறுவனத்தில் நான்கு ஆண்டு சட்டப் பயிற்சியின் கீழ் உள்ளார்.[16][17]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

கிம்பர்லி நோயல் கர்தாசியன் 1980 ஆம் ஆண்டு, அக்டோபர் 21 அன்று கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வழக்கறிஞரான ராபர்ட் மற்றும் கிறிஸ் கர்தாசியன் ஆகியோருக்குப் பிறந்தார்.[18] அவருக்கு கோர்ட்னி என்ற ஒரு மூத்த சகோதரியும் க்ளோ என்ற ஒரு இளைய சகோதரியும் ராப் என்ற ஒரு இளைய சகோதரரும் உள்ளனர்.[19] இவர்களது தாயார் ஸ்காட்டிஷ் மற்றும் டச்சு வம்சாவளியைச் சேர்ந்தவர், இவர்களது தந்தை ஆர்மீனிய வம்சாவளியை சேர்ந்தவர்.[20][21][22] 1991 ஆம் ஆண்டில், அவர்களின் பெற்றோர் விவாகரத்து செய்தனர். பின்னர் இவர்களின் தாயார் 1976 கோடைகால ஒலிம்பிக் டெகத்லான் வெற்றியாளரான புரூஸ் ஜென்னரை மணந்தார்.[23] அவரது தாயின் மறுமணம் காரணமாக, கிம் கர்தாஷியனுக்கு பர்ட், பிராண்டன், ப்ரோடி ஆகிய மூன்று சகோதரர்களும் கேசி என்ற சகோதரியும், பின்னர் தாயார் பெற்ற கெண்டால், கைலி ஜென்னர் ஆகிய இரண்டு சகோதரிகளும் உள்ளனர். [24]

கர்தாசியன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ரோமன் கத்தோலிக்க அனைத்து பெண்கள் பள்ளியான மேரிமவுண்ட் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.[25] 1994 ஆம் ஆண்டில், வழக்கறிஞரான அவரது தந்தை கால்பந்து வீரர் ஓ. ஜே. சிம்ப்சனின் கொலை வழக்கு விசாரணையின் போது சிம்ப்சனுக்காக வாதாடினார். சிம்ப்சன் கிம் கர்தாஷியனின் ஞானத் தந்தை ஆவார். கர்தாஷியனின் தந்தை ராபர்ட் 2003 இல் புற்றுநோயால் இறந்தார். தனது பதின்ம வயதில் கர்தாஷியன் நிக்கோல் ரிச்சி மற்றும் பாரிஸ் ஹில்டனின் நெருங்கிய நண்பராக இருந்தார், அவர்கள் மூலம் அவர் முதலில் ஊடக கவனத்தை ஈர்த்தார்.[26] எதிர்கால சேதங்கள் தொடர்பான அனைத்து செலவுகளையும் செலுத்த அவர் ஒப்புக்கொள்வார் என்ற நிபந்தனையின் பேரில் அவரது தந்தை அவருக்கு 16 வயதில் புதிய காரை வாங்க ஒப்புக்கொண்டார்.[27] பின்னர் அவர் கலிபோர்னியாவின் என்சினோவில் உள்ள பாடி என்ற உள்ளூர் ஆடை நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார், நான்காண்டுகளுக்குப் பின் 2000 ஆம் ஆண்டில், தனது முதல் திருமணத்தில் நுழைந்த பிறகு, அவர் இந்த வேலையைத் துறந்தார்.[28]

தொழில் வாழ்க்கை

தொடக்கம் (2003-2006)

2003 வாக்கில், கர்தாஷியன் பாடகரும் நடிகையுமான ரே ஜே வின் சகோதரியான பிராண்டிக்குத் தனிப்பட்ட ஒப்பனையாளராகப் பணிபுரிந்தார்.[29] பின்னர், இவர்களின் தாயாரும் மேலாளருமான சோன்ஜா நார்வுட், 2004 ஆம் ஆண்டில் தனது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கடனட்டையில் "ஒரே ஒரு" கொள்முதல் செய்ய கர்தாசியனுக்கு அங்கீகாரம் அளித்ததாகவும், இருப்பினும் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரிகள் க்ளோ மற்றும் கோர்ட்னி அந்த அட்டையில் அங்கீகரிக்கப்படாத கட்டணங்களில் $120,000 க்கும் அதிகமாக செலவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் ஒப்பனையாளர் பணியிலிருந்து விலக்கப்பட்டார். பின்னர், 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் கர்தாசியனின் குடும்பத்திற்கு சொந்தமான ஆடை நிறுவனத்திற்காக செய்யப்பட்ட கொள்முதலில் தனது கடனட்டையிலிருந்து எடுக்கப்பட்ட தொகை பெருமளவு இருப்பதாக நார்வுட் குற்றம் சாட்டினார். தனது குழந்தைகளின் வேண்டுகோளின் பேரில், அவர் குற்றவியல் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்யவில்லை என்றும், அதற்கு பதிலாக தனது குற்றச்சாட்டுகளை கர்தாசியனிடம் தனிப்பட்ட முறையில் முன்வைத்ததாகவும், கர்தாசியன் மன்னிப்பு கேட்டு கடனை திருப்பிச் செலுத்துவதாக உறுதியளித்ததாகவும் நார்வுட் மேலும் குற்றம் சாட்டினார். 2008 ஆம் ஆண்டில், பணம் செலுத்தப்படாதபோது, நார்வுட் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கர்தாசியன் மறுத்துள்ளார். 2009 ஆம் ஆண்டில், இரு கட்சிகளும் ஒரு ரகசிய தீர்வை எட்டியதாகவும், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.[30][31]

2006 ஆம் ஆண்டில், கர்தாசியன் தனது குழந்தை பருவ நண்பரான பாரிஸ் ஹில்டனுக்கு ஒப்பனையாளராக பணியாற்றத் தொடங்கினார். அவர் உண்மைத் தொடரான தி சிம்பிள் லைஃப் என்ற தொடரின் பல அத்தியாயங்களில் தோன்றினார், மேலும் நிகழ்வுகள் மற்றும் விருந்துகளுக்கு ஹில்டனுடன் அடிக்கடி சென்று புகைப்படம் எடுக்கப்பட்டார்.[32][33] அந்த நேரத்தில் இரவு கேளிக்கைகளுக்கு கிம் கர்தாசியன் ஹில்டனுடன் செல்வது அந்த நேரத்தில் ஹாலிவுட்டின் முதல் பேசுபொருளானது. ஹில்டனுடன் பணிபுரியும் தனி உதவியாளரான ஷீராஸ் ஹசன், முன்பு 2005 இல் கர்தாஷியன் மற்றும் அவரது தாயார் கிரிஸ் ஜென்னரைச் சந்தித்திருந்தார். ஒரு வெற்றிகரமான வணிகத்தை உருவாக்க கிம் கர்தாசியன் "எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக" என்று 2020 இல் 20/20 என்ற தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியில் ஷீராஸ் ஹசன் கூறிகூறியிருந்தார். டி எம் இசட் என்ற பத்திரிக்கைக்கு நியமிக்கப்பட்ட ஒரு புகைப்படக் கலைஞரான ரிக் மென்டோசா, அதே நேர்காணலில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கர்தாசியனின் புகைப்படங்களைப் பெற சிறு இதழ்களிடமிருந்து தொடர்ந்து பணிகளைப் பெற்றார்.[34] 2021 ஆம் ஆண்டில், கர்தாசியன் ஹில்டன் "உண்மையில் எனக்கு ஒரு தொழிலைக் கொடுத்தார். அதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்" என்று கூறினார்.[35]

திருப்புமுனை (2007-2010)

2007 ஆம் ஆண்டில் ஏழாவது வருடாந்திர ஹாலிவுட் லைஃப் இதழ் விருதுகளில் கர்தாஷியன்

பிப்ரவரி 2007 இல், கர்தாஷியன் மற்றும் பாடகர் ரே ஜே 2003 இல் தயாரித்த ஒரு ஆபாசப் படம் இணையத்தில் கசிந்து தேசிய கவனத்தை ஈர்த்தது.[36][37] கிம் கர்தாசியன்: சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படத்தை விநியோகித்ததற்காக விவிட் என்டர்டெயின்மென்ட் மீது கர்தாசியன் வழக்கு தொடர்ந்தார்.[38] அவர் 3 மாதங்களுக்குப் பிறகு வழக்கை கைவிட்டார், மேலும் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு தீர்வு கண்டார், டேப்பின் நகல்களை சந்தைப்படுத்தவும் விற்கவும் விவிட்டுக்கு அனுமதி அளித்தார்.[1] முதல் ஆறு வாரங்களில் இந்த படத்தின் விற்பனை கிட்டத்தட்ட 15 லட்சம் அமெரிக்க டாலர்களை ஈட்டியதாக கூறப்படுகிறது.[39] அவரும் அவரது குடும்பத்தினரும் தங்களின் உண்மை நிகழ்ச்சியான தொலைக்காட்சித் தொடரைப் பிரபலப்படுத்த இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டதாக பல ஊடகங்கள் விமர்சித்தன.[40][41][42]

அக்டோபர் 2007 இல், கர்தாஷியன் மற்றும் அவரது தாயார் கிரிஸ் ஜென்னர், அவரது மாற்றாந்தாய் பெற்றோர் கெய்ட்லின் ஜென்னர் (பின்னர் புரூஸ் ஜென்னர்) அவரது உடன்பிறப்புகள் கோர்ட்னி, க்ளோ மற்றும் ராப் கர்தாஷியன், மற்றும் அரை சகோதரிகள் கெண்டால் மற்றும் கைலி ஜென்னர் ஆகியோர் ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரில் தோன்றத் தொடங்கினர்.[43] இந்தத் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் கோர்ட்னி அண்ட் கிம் டேக் நியூயார்க், கோர்ட்னி அன்ட் கிம் டேக் மியாமி உள்ளிட்ட பல தொடர்கள் உருவாக்கவும் வழிவகுத்தது.[44] 294 அத்தியாயங்களுக்குப் பிறகு ஜூன் 2021 இல் முதன்மைத் தொடர் முடிவடைந்தது.[45]

கிம் கர்தாசியன் டிசம்பர் 2007 பிளேபாய் இதழுக்கான நிர்வாண படத்தில் காட்சி கொடுத்தார், மற்றும் ருமேனிய பிளேபாயின் நவம்பர் 2010 இதழின் அட்டைப்படத்திலும் தோன்றினார்.[46][47][48] அதன் பின்னர் அவர் கார்மென் எலக்ட்ராவுக்கு ஜோடியாக, டிசாஸ்டர் மூவி (2008) என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அதில் அவர் லிசா என்ற கதாபாத்திரத்தில் தோன்றினார்.[49][50] 2008 ஆம் ஆண்டில், டான்சிங் வித் தி ஸ்டார்ஸின் ஏழாவது தொகுப்பில் அவர் பங்கேற்பாளராக இருந்தார், அங்கு அவர் மார்க் பல்லாஸுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.[51] அவர் வெளியேற்றப்பட்ட மூன்றாவது போட்டியாளர் ஆவார். .[52] செப்டம்பர் 2009 இல், ஃப்யூஷன் பியூட்டி மற்றும் செவன் பார் ஃபவுண்டேஷன் ஆகியவை கர்தாசியனை பிரச்சாரத்தின் முகமாக கொண்டு "வறுமையை முத்தமிடுதல்" என்ற திட்டத்தை தொடங்கின. விற்கப்படும் ஒவ்வொரு உதட்டுச் சாயத்திலிருந்தும் அமெரிக்காவில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு நிதியளிக்கும் அறக்கட்டளைக்கு 1 அமெரிக்க டாலர் சென்றது.[53] அக்டோபரில், அவர் தனது முதல் நறுமனத் தயாரிப்பினை "கிம் கர்தாஷியன்" என்ற பெயரில் வெளியிட்டார்.[54][55] அந்த ஆண்டு, அவர் ஒரு உடற்பயிற்சி தொடரைக் கொண்ட மின்னணு பல்லூடக வட்டினையும் (டி.வி.டி) வெளியிட்டார், அமெரிக்காவின் நெக்ஸ்ட் டாப் மாடல் ரெஸில்மேனியா XXIV என்ற நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் இருந்தார்.[56][57][58][59] ஹௌ ஐ மெட் யுவர் மதர், பியான்ட் த பிரேக்,[60] போன்ற திரைப்படங்களில் சிறப்பு வேடங்களிலும் நடித்துள்ளார்.[61][62]

2010 இல் தி ஹார்ட் ட்ரூத் நிகழ்ச்சியில் கர்தாசியன்

2010 வாக்கில், கர்தாசியன் கார்ல்ஸ் ஜூனியர் நிறுவனத்தில் பல்வேறு உணவுப் பொருட்களுக்கு ஒப்புதல் அளித்தல் உட்பட பல புதிய ஒப்புதல் ஒப்பந்தங்களில் ஈடுபட்டார்.[63][64] ஜூலை 1,2010 அன்று, நியூயார்க் நகர மேடம் துசாட்ஸ் கிளை கர்தாசியனின் மெழுகு உருவத்தை காட்சிப்படுத்தியது.[65] கிம், கோர்ட்னி மற்றும் க்ளோ ஆகியோர் இணைந்து கர்தாசியன் இரகசியங்கள் என்ற சுயசரிதையை எழுதினர், இது நவம்பர் 23,2010 அன்று கடைகளில் வெளியிடப்பட்டது, மேலும் நியூயார்க் டைம்சின் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்றது.[66] டிசம்பர் 2010 இல், "ஜாம் (டர்ன் இட் அப்)" என்ற தலைப்பில் ஒரு பாடலுக்கான இசைக் காணொளியை கர்தாசியன் படமாக்கினார். இந்தக் காணொளியை ஹைப் வில்லியம்ஸ் இயக்கினார். இதில் கன்யே வெஸ்ட் சிறப்பு வேடத்தில் தோன்றியுள்ளார்.[67] டிசம்பர் 31,2010 அன்று லாஸ் வேகாசில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கர்தாசியன் இந்த பாடலை அறிமுகப்படுத்தினார்.[68] அப்பொழுது எனது தந்தை புற்றுநோயால் காலமானதைத் தொடர்ந்து இந்தக் காணொளியின் வருமானத்தில் பாதியை நாங்கள் ஒரு புற்றுநோய் அறக்கட்டளைக்கு வழங்குகிறோம் எனக் குறிப்பிட்டார்.[69] டெய்லி நியூஸிற்காக எழுதும் ஜிம் ஃபார்பர், இந்த பாடலை விமர்சித்ததோடு கிம் கர்தாசியனை " ஒரு மோசமான பாடகர்" என்றும் பரிந்துரைத்தார்.[70]

2010 ஆம் ஆண்டில், தி ஸ்பின் கிரவுட் என்ற உண்மைத் தொலைக்காட்சித் தொடரில் கிம் கர்தாசியன் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். இது ஜொனாதன் சேபான் மற்றும் சைமன் ஹக் ஆகியோரால் நடத்தப்படும் நியூயார்க் நகர மக்கள் தொடர்பு நிறுவனத்தைப் பற்றிய ஒரு தொலைக்காட்சி உண்மைத் தொடரின் பத்தாவது தொகுப்பான தி அப்ரென்டிஸ் என்று வெளிவந்தது. மேலும் அதே ஆண்டு வெளிவந்த <i id="mwAfw">90210</i> தொடரின் மூன்றாவது தொகுப்பின் முதன்மை அத்தியாயத்தில் க்ளோ மற்றும் கோர்ட்னியுடன் கிம் விருந்தினராக நடித்தார்.[71][72][73]

தொடர்ந்து வெளிப்பாடு (2011-2016)

2011 ஆம் ஆண்டில், கர்தாஷியன் தனது மூன்றாவது நறுமணத் திரவியமான "கோல்ட்"- ஐயும் அத்துடுடன் டால்ஹவுஸ் என்ற ஒரு புதினத்தையும் தனது சகோதரிகளான கோர்ட்னி மற்றும் க்ளோ ஆகியோருடன் இணைந்து வெளியிட்டார்.[54][74] 2012 இல், ஈ! கீப்பிங் அப் வித் கர்தாஷியன்ஸ் இரண்டு கூடுதல் பருவங்களுக்கு புதுப்பிக்கப்பட்டது, ஒரு ஒப்பந்தம் $50 மில்லியன் மதிப்புடையது என்று தெரிவிக்கப்பட்டது.[75]அந்த ஆண்டு, கர்தாஷியன் தனது நான்காவது நறுமணத் திரவியமான "ட்ரூ ரிஃப்ளெக்ஷன்" ஐ வெளியிட்டார், அதை அவர் விளம்பரப்படுத்த டிரெஸ் ஃபார் சக்ஸஸ் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிந்தார். அவரது ஐந்தாவது தயாரிப்பு, "கிளாம்", இது டெபென்ஹாம்ஸ் என்ற நிறுவனம் விற்பனை செய்தது.[76][77] டைலர் பெர்ரி என்பவர் எழுதி, தயாரித்து, இயக்கிய டெம்ப்ட்டேசன்: கன்பெசன்ஸ் ஆப் அ மேரேஜ் கவுன்சிலர் என்ற காதல் திடைப்படத்தில் கிம் கர்தாசியன் இலட்சியவாதியான ஒரு சிகிச்சையாளரின் சக ஊழியராக நடித்தார். இந்த படம் ஒரு மிதமான வெற்றியைப் பெற்ற போதிலும், உலகளவில் 53.1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது[78]. இப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. கிம் கர்தாஷியன் மோசமான துணை நடிகைக்கான ராஸ்ஸி விருதை வென்றார்.[79][80]

செப்டம்பர் 2014 இல் ஆஸ்திரேலியா சிட்னியில் கர்தாசியன்

கர்தாசியன் ஜூன் 2014 இல் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு அலைபேசிகளுக்கான கிம் கர்தாஷியன்: ஹாலிவுட் என்ற அலைபேசி விளையாட்டை வெளியிட்டார். இந்த விளையாட்டின் நோக்கம் ஹாலிவுட் நட்சத்திரம் அல்லது நட்சத்திரமாக மாறுவதாகும்.[81] இந்த விளையாட்டு இலவசமாக விளையாடக்கூடிய மாதிரியை ஆதரிக்கிறது. அதாவது விளையாட்டை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். ஆனால் விளையாட்டில் உள்ள உருப்படிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.[82] இவ்விளையாட்டு வெளியான முதல் ஐந்து நாட்களில் 16 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்தது.[82]  ஜூலை மாதம், டெவலப்பர் க்ளூ மொபைல் நிறுவனம் இந்த விளையாட்டு ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் அதிக வருமானம் ஈட்டும் ஐந்தாவது விளையாட்டு என்று அறிவித்தது.[82] அவர் செப்டம்பர் 21,2014 அன்று அமெரிக்கன் டாட் என்ற அசைபடத் தொடரின் அத்தியாயத்தில் ஒரு ஏலியனுக்காகக் குரல் கொடுத்தார். [83][84]

2014 இல் பேப்பர் இதழின் குளிர்கால வெளியீட்டில் கிம்கர்தாசியன் ஜீன் பால் கௌட் என்பவர் எடுத்த கிம் கர்தாசியனின் பின்புறத்தை நிர்வாணமாகக் காட்டும் ஓர் புகைப்படம், பிரேக் த இன்டர்நெட் என்ற தலைப்பிட்டு, அதன் அட்டைப்படத்தில் வெளியிடப்பட்டது .[85] இது சமூக மற்றும் பாரம்பரிய ஊடகங்களில் கணிசமான கருத்துக்களை உருவாக்கியது.[86][87] ஒரு டைம் இதழ் எழுத்தாளர் இப்படத்திற்காக கிம் கர்தாசியனை மோசமாக விமர்சித்தார்.[88][89][90] இருப்பினும்,சாதாரண நாளில் 25,000 மாக இருந்த பேப்பர் இதழின் வலைப்பக்கப் பார்வை 15. 9 மில்லியனாக உயர்ந்தது.

2015 மே- இல் கர்தாசியன் தன்னை சுயமாக எடுத்த புகைப்படங்களின் 325 பக்க தொகுப்பான செல்பிஷ் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.[91] இது விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, தி டெலிகிராப் கேட் பிரவுன் இதை "எதிர்பாராத விதமாக வெளிப்படுத்துகிறது" என்று விவரித்தார்.[92][93] அந்த ஆண்டு, அவர் வோக் ஸ்பெயினின் ஆகஸ்ட் இதழின் அட்டைப்பட மாதிரியாகவும் தோன்றினார். மேலும் கிமோஜி என்ற iOS சாதனங்களுக்கான ஈமோஜி தொகுப்பினை வெளியிட்டார்.[94][95] இந்தச் செயலி சிறந்த விற்பனையாளராக இருந்தது, அதன் முதல் வார வெளியீட்டில் அதிகம் வாங்கப்பட்ட முதல் 5 செயலிகளில் ஒன்றாக மாறியது.[95]

நவம்பர் 2016 வாக்கில், சிபிசி மார்க்கெட்ப்லேஸ் மற்றும் பிரபல ஒப்புதல் நிபுணர்களுடனான நேர்காணல்கள் படி, கிம் கர்தாசியன் இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் டுவிட்டரில் அழகு சாதனப் பொருட்களான இடுப்பு பயிற்சிக் கருவிகள் , பற்கள் வெண்மையாக்கிகள் மற்றும் கோகோ கோலா போன்ற பொருட்களுக்கும் நன்கு அறியப்பட்ட அறக்கட்டளைகள் ஆகியவற்றைப் பற்றியும் அவர் பதிவிட்ட ஒவ்வொரு இடுகைக்காகவும் குறைந்தது 300,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிசினஸ் இன்சைடர் பின்னர் அவரது கட்டணம் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு சுமார் 720,000 அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிட்டது. பொழுதுபோக்குத் தரவு அவரது இடுகைகளின் மதிப்பு அதைவிடச் சற்று குறைவாக இருப்பதைக் குறிக்கிறது என்றாலும், செய்திகளில் அவரது வழக்கமான அம்சங்கள் எந்தவொரு கணக்கிடப்பட்ட இன்ஸ்டாகிராம் விளம்பரம் செய்யப்பட்ட இடுகை விலையையும் விட பிரீமியம் கோர அனுமதிக்கிறது.[96]

அழகு சாதனங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஸ்கிம்ஸ் (2017-2019)

கர்தாஷியன் 2017 ஆம் ஆண்டில் கே. கே. டபிள்யூ பியூட்டி, கே. கே. டபிள்யூ ஃப்ராக்ரன்ஸ் ஆகியவற்றை நிறுவினார், இவை இரண்டும் 2022 வரை இயங்கின-முந்தையது 2021 ஆம் ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டது.[3][4] பின்னர் 2019 ஆம் ஆண்டில் வடிவமைப்புக்கான உள்ளாடைகள், ஆடை நிறுவனமான ஸ்கிம்ஸை நிறுவினார், இதன் மதிப்பு 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி 4 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும்.

இதனைச் சந்தைப் படுத்த வேண்டி கர்தாஷியன் லாவெர்ன் காக்ஸ் என்பவருடன் இணை நிர்வாகியாக இணைந்து வாழ்நாள் உண்மைத் தொலைக்காட்சித் தொடரான கிளாம் மாஸ்டர்ஸ் என்ற தொடரைத் தயாரித்தார். இது பிப்ரவரி 2018 இல் திரையிடப்பட்டது.[97] எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடர், வெற்றி பெற்றவருக்கு "கிளாம் மாஸ்டர்" என்ற பட்டத்திற்காக போட்டியிட்ட, ஆர்வமுள்ள அழகான பதிவர்களைச் சுற்றி வந்தது. இதில் பரிசுகளுடன் கர்தாசியனுடன் கேகேடபிள்யூ பியூட்டிக்கான ஒப்பனை வரிசையில் ஒத்துழைப்பது மற்றும் அவரது "கிளாம் அணியில்" சேரும் வாய்ப்பு ஆகியவை அடங்கும்.[98][99] தொடரின் வெற்றியாளரான ஆர்கெனிஸ் பினல் கேகேடபிள்யூ பியூட்டிக்காக "கிரீம் கலர் ஸ்டிக்" என்று பெயரிடப்பட்ட கண் நிழல் குச்சிகளுக்கான ஒப்பந்தத்தில் கர்தாசியனுடன் இணைந்தனர்.[100] ஜூன் 8,2018 அன்று வெளியான ஓஷன் 'ஸ் 8 என்ற கொள்ளை திரைப்படத்தில் அவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.[101] கர்தாஷியனின் அடுத்த திட்டம் மறைக்கப்பட்ட கேமரா-குறும்பு உண்மைத் தொடர் யூ கிடின் 'மீ என்பதாகும். லயன்ஸ்கேட் தொலைக்காட்சி தயாரித்த இதில் கர்தாசியன் இணை-நிர்வாகியாவார். இந்த வலைத் தொடர் செப்டம்பர் 2018 இல் முகநூல் வாட்ச்சில் திரையிடப்பட்டது.[102] இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தில் அவர் தனது சகோதரிகள் மற்றும் தாய் கிரிஸ் ஜென்னருடன் தோன்றினார்.[103] நவம்பரில், கர்தாசியன் மற்றும் கிறிஸ் ஆகியோர் என். பி. சி சிறப்பு நிகழ்ச்சியான எ லெஜெண்டரி கிறிஸ்துமஸ் வித் ஜான் அண்ட் கிறிஸி நிகழ்ச்சியில் தோன்றினர்.[104] <nowiki>

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Kardashian to profit from sex tape". United Press International. May 1, 2007. Archived from the original on August 12, 2015. Retrieved August 17, 2013."Kardashian to profit from sex tape". United Press International. May 1, 2007. Archived from the original on August 12, 2015. Retrieved August 17, 2013.
  2. Paquette, Danielle (July 16, 2012). "Kim Kardashian, Kanye West canoodle at Melrose Dash grand opening". Los Angeles Times. Archived from the original on June 4, 2016. Retrieved May 10, 2016.
  3. 3.0 3.1 Tinubu, Aramide (October 21, 2019). "Kim Kardashian's Business Glow-Up Has Been Hella Remarkable". StyleCaster. Archived from the original on October 29, 2019. Retrieved January 4, 2020.
  4. 4.0 4.1 Berg, Madeline (April 6, 2021). "With KKW Beauty and popular shapewear firm Skims, Kardashian West's net worth increases to $1 billion, earning her a spot on Forbes' World's Billionaires List". Forbes. Archived from the original on September 25, 2022. Retrieved December 23, 2023.
  5. Marinelli, Gina (September 10, 2019). "Everything We Know About Skims, Kim Kardashian's Solutionwear Line". Glamour. Archived from the original on January 7, 2020. Retrieved January 4, 2020.
  6. Johnson, Kirbie (June 1, 2022). "Kim Kardashian Is Relaunching Her Beauty Empire". Allure. Archived from the original on December 23, 2023. Retrieved December 23, 2023.
  7. O'Connell, Mikey (April 10, 2023). "All the Details on Kim Kardashian Starring in 'American Horror Story' Season 12 (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on April 11, 2023. Retrieved April 11, 2023.
  8. "These Are The 100 Most Influential People In The World". Time. Archived from the original on August 27, 2017. Retrieved June 27, 2023.
  9. "Most Powerful Women". Fortune (in ஆங்கிலம்).
  10. Morgan, Eleanor (April 20, 2016). "Why is Kim Kardashian famous? You asked Google – here's the answer". The Guardian இம் மூலத்தில் இருந்து August 2, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200802222306/https://www.theguardian.com/commentisfree/2016/apr/20/why-is-kim-kardashian-famous. 
  11. Seemayer, Zach (March 2015). "Kim Kardashian on the Success of Her Mobile App and Her Social Media Empire". ET Online. Archived from the original on June 17, 2016. Retrieved June 11, 2016.
  12. "Top 100 Instagram Business Accounts / Creator Accounts". Social Blade. Archived from the original on December 24, 2018. Retrieved May 8, 2023.
  13. Multiple sources:
  14. Trepany, Charles. "Rihanna makes Forbes' billionaires list debut; Kim Kardashian, Ye, Jay-Z, more make 2022 cut". USA Today. Archived from the original on October 27, 2022. Retrieved October 4, 2022.
  15. Helena Andrews-Dyer. "Kim Kardashian is still fighting for criminal justice reform". The Washington Post இம் மூலத்தில் இருந்து December 29, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191229043923/https://www.washingtonpost.com/arts-entertainment/2019/01/31/kim-kardashian-is-still-fighting-criminal-justice-reform/. 
  16. Multiple sources:
  17. Canon, Gabrielle (November 29, 2019). "Jessica Jackson, a single mom from California, took on the prison system — and changed her life". USA Today இம் மூலத்தில் இருந்து February 3, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210203163434/https://www.usatoday.com/story/news/politics/2019/11/29/single-mom-took-prison-system-changing-narrative-cut-50-kim-kardashian/4002583002/. 
  18. "Kimberly Noel Kardashian, Born October 21, 1980, in California". California Birth Index. Archived from the original on April 7, 2019. Retrieved August 17, 2013.
  19. Sagimbeni, Nick (January 9, 2013). "Kourtney, Kim, Khloe, Robert, Kylie and Kendall Kardashian". Archived from the original on June 3, 2014. Retrieved June 19, 2015.
  20. Kim Kardashian (June 11, 2008). "Monuments And Momentous Times In Monte Carlo". Kim Kardashian: Official website. KimKardashian.com. Archived from the original on May 18, 2015. Retrieved May 13, 2015. But as we were digging down into our history we realized that on my mom's side, she is Scottish and Dutch.
  21. "Hollywoodsterren waarvan je niet wist dat ze Nederlandse roots hebben". www.vogue.nl (in டச்சு). Vogue Nederland. 31 October 2022. Archived from the original on November 13, 2023. Retrieved 12 November 2023.
  22. Barford, Vanessa (January 8, 2013). "Kim Kardashian: How do Armenians feel about her fame?". BBC. Archived from the original on June 26, 2019. Retrieved July 2, 2014.
  23. "Jenner-Kardashian". The Day (New London, Connecticut): p. A2. April 23, 1991 இம் மூலத்தில் இருந்து January 25, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230125205314/https://news.google.com/newspapers?id=iQQhAAAAIBAJ&pg=1187,4802006. 
  24. Mayish, Jeff (May 1, 2013). "Ex-nanny to the Kardashians reveals Kris Jenner's temper and an O. J. Simpson trial kidnap scare". Mortimer Zuckerman. Archived from the original on September 21, 2013. Retrieved August 17, 2013.
  25. Austin, Christina; Acuna, Kirsten (September 27, 2012). "Check Out The Elite Schools Where Celebrities Send Their Kids". Business Insider. Archived from the original on June 20, 2015. Retrieved May 17, 2015.
  26. "Kim Kardashian Biography". The Biography Channel. A+E Networks. Archived from the original on April 1, 2019. Retrieved August 17, 2013.
  27. Nesvig, Kara (July 8, 2018). "Kim Kardashian on Her First Job, Reality TV Fame, and the Paris Robbery". Teen Vogue. Archived from the original on March 3, 2022. Retrieved March 3, 2022.
  28. "Kim Kardashian, Mogul, Tells Us Her Money Story". WealthSimple Magazine. March 2022. Archived from the original on March 3, 2022. Retrieved March 3, 2022.
  29. "Kim Kardashian's Shady Behavior As Brandy's Stylist Explained". ScreenRant. April 18, 2021. Archived from the original on June 23, 2023. Retrieved June 23, 2023.
  30. Lin, Joanna. "Brandy's Mom Lawsuit with Kim Kardashian Dismissed". People Magazine. Archived from the original on March 3, 2022. Retrieved March 3, 2022.
  31. "Brandy's Mom Explains Lawsuit Against Kardashians". People Magazine. Archived from the original on March 3, 2022. Retrieved March 3, 2022.
  32. Halperin, Ian (April 19, 2016). Karadashian Dynasty. Simon & Schuster UK. ISBN 9781471155222. Archived from the original on September 12, 2023. Retrieved September 25, 2022.
  33. Chung, Gabrielle (November 13, 2021). "How Kim Kardashian Played a Part in Paris Hilton's "Ultra Classy" Wedding Day". E! News Online. Archived from the original on March 3, 2022. Retrieved March 3, 2022.
  34. Yang, Allie; Pearson, Muriel. "Starlets of early 2000s were meticulously created, collaborators reveal". ABC News. Archived from the original on March 3, 2022. Retrieved March 3, 2022.
  35. Calvario, Liz. "See Kim Kardashian Return to Her Stylist Roots at Pal Paris Hilton's Wedding". Entertainment Weekly. Archived from the original on March 3, 2022. Retrieved March 3, 2022.
  36. "Kim Kardashian on Sex Tape: 'A Tape Does Exist'". Extra. NBCUniversal. February 7, 2007. Archived from the original on May 17, 2019. Retrieved August 17, 2013.
  37. "Ray J Sends 'Love & Congratulations' To Kim Kardashian & Kanye West". Access Hollywood. NBCUniversal. July 8, 2013. Archived from the original on July 15, 2013. Retrieved August 17, 2013.
  38. "Kim Kardashian Sues Over Sex Tape". Peoplemag. Archived from the original on June 23, 2023. Retrieved June 23, 2023.
  39. updated, Heidi Venable last (September 13, 2022). "Ray J Released Details On How Much Money Kim Kardashian Initially Made From Their Sex Tape". CINEMABLEND. Archived from the original on June 23, 2023. Retrieved June 23, 2023.
  40. "The Kardashian Decade: How a Sex Tape Led to a Billion-Dollar Brand". Hollywood Reporter. Archived from the original on April 8, 2021. Retrieved May 8, 2023.
  41. "10 Years Ago, Kim Kardashian Turned a Sex Tape Into a Business Empire". Complex. Archived from the original on October 21, 2021. Retrieved May 8, 2023.
  42. "Kim Kardashian Made Sex Tape For Fame, Sources Say". Yahoo News. June 22, 2012. Archived from the original on June 23, 2023. Retrieved June 23, 2023.
  43. Nordyke, Kimberly (November 13, 2007). "'Kardashians' earns its keep". The Hollywood Reporter. Prometheus Global Media. Archived from the original on April 7, 2019. Retrieved August 17, 2013.
  44. Karen (August 16, 2013). "Scott Disick is the Father of Mason Disick!". Las Vegas Guardian Express. Archived from the original on May 17, 2019. Retrieved August 17, 2013.
  45. del Barco, Mandalit (June 10, 2021). "The Kardashians Kiss Reality TV Goodbye — And Move On To Disney And Hulu". npr.org. Archived from the original on June 23, 2023. Retrieved June 23, 2023.
  46. "Kim Kardashian info". Biography.com. Archived from the original on April 1, 2019. Retrieved September 3, 2016.
  47. "Kim Kardashian Playboy – Kim Kardashian Nude – Pics and Videos of the Sex Tape Celebrity". Playboy. January 27, 2009. Archived from the original on February 28, 2012. Retrieved August 17, 2013.
  48. "Poezia Unui Fund Bombat" [The Poetry of a Bulging Ass]. Playboy (in ரோமேனியன்). Vol. 113, no. 11. Romania. November 2010. p. Cover.
  49. Matt Webb Mitovich (August 29, 2008). "Disaster Movie Star Kim Kardashian Names Her Favorite Butt". TVGN. CBS Corporation. Archived from the original on March 3, 2013. Retrieved August 17, 2013.
  50. "Disaster Movie from Kim Kardashian: Pop Culture Queen". E! Online. NBCUniversal. Archived from the original on September 12, 2023. Retrieved August 17, 2013.
  51. "10 Stars You Totally Forgot Competed on 'Dancing With the Stars' (VIDEO)". TV Insider இம் மூலத்தில் இருந்து July 9, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210709190835/https://www.tvinsider.com/828520/dancing-with-the-stars-past-contestants-kim-kardashian-mark-cuban-wendy-williams/. 
  52. Lang, Derrik J. (October 1, 2008). "Kim Kardashian kicked off 'Dancing With the Stars'". USA Today. Archived from the original on June 21, 2013. Retrieved August 17, 2013.
  53. "Fusion Beauty". Seven Bar Foundation. Archived from the original on October 18, 2010. Retrieved July 3, 2011.
  54. 54.0 54.1 "Kim Kardashian Fragrances". fragrantica.com. Archived from the original on September 12, 2023. Retrieved November 6, 2012."Kim Kardashian Fragrances". fragrantica.com. Archived from the original on September 12, 2023. Retrieved November 6, 2012.
  55. "Kardashian Fame and Fragrance". Toronto Star. April 28, 2010 இம் மூலத்தில் இருந்து May 1, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100501150704/http://www.thestar.com/living/article/801349--kardashian-fame-and-fragrance. 
  56. "Kim Kardashian Biography". Biography. Archived from the original on April 1, 2019. Retrieved February 22, 2016.
  57. Saini, Mia (July 1, 2010). "Kim Kardashian Powering to the Top". Forbes. Archived from the original on August 14, 2010. Retrieved August 30, 2010.
  58. "Sweatin' with Kim Kardashian". Allure Magazine. April 14, 2009 இம் மூலத்தில் இருந்து April 19, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090419125017/http://www.allure.com/beauty/blogs/reporter/2009/04/sweatin-with-kim-kardashian.html. 
  59. Gina DiNunno (August 4, 2009). "Lauren Conrad and Kim Kardashian to Guest Judge Top Model". TV Guide இம் மூலத்தில் இருந்து August 8, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090808073859/http://www.tvguide.com/News/Lauren-Conrad-Kim-1008663.aspx. 
  60. Parsley, Aaron (June 5, 2009). "Kim Kardashian Gets Slimed on Beyond the Break". People. Archived from the original on August 31, 2009. Retrieved June 29, 2015.
  61. "Kim Kardashian Biography". Biography. Archived from the original on April 1, 2019. Retrieved February 22, 2016.
  62. Saini, Mia (July 1, 2010). "Kim Kardashian Powering to the Top". Forbes. Archived from the original on August 14, 2010. Retrieved August 30, 2010.
  63. "All the Rage: Kardashian Endorsements Seem to Have Va-Va-Vroom". Los Angeles Times. February 26, 2010. Archived from the original on June 11, 2010. Retrieved August 30, 2010.
  64. Goudreau, Jenna (April 13, 2010). "Reality TV Stars Turned Entrepreneurs". Forbes. Archived from the original on June 29, 2012. Retrieved August 30, 2010.
  65. Klopsis, Nick (July 2, 2010). "Seeing double! Kim Kardashian Unveils Wax Statue Lookalike at Madam Tussauds in Times Square". New York Daily News இம் மூலத்தில் இருந்து March 19, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110319110021/http://www.nydailynews.com/gossip/2010/07/02/2010-07-02_kim_kardashian_unveils_wax_statue_lookalike_at_madam_tussauds_in_times_square.html. 
  66. "Keeping Up With Kim, Kourtney and Khloé: The Kardashian Sisters Are Writing a Book!". June 18, 2010 இம் மூலத்தில் இருந்து October 28, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101028050159/http://www.glamour.com/sex-love-life/blogs/smitten/2010/06/keeping-up-with-kim-kourtney-a.html. 
  67. "Dope Or Nope? Kim Kardashian Debuts New Single 'Turn It Up'". Vibe. January 3, 2011. Archived from the original on July 14, 2014. Retrieved July 2, 2014.
  68. "Kim Kardashian Debuts The-Dream-Penned Single in Vegas". Rap-Up.com. Archived from the original on July 18, 2011. Retrieved July 3, 2011.
  69. "Latest Music News, Band, Artist, Musician & Music Video News". Billboard. February 7, 2011. Archived from the original on June 29, 2013. Retrieved July 3, 2011.
  70. Farber, Jim (March 2, 2011). "Kim Kardashian song 'Jam (Turn It Up)' makes her the worst singer in the reality TV universe". Daily News இம் மூலத்தில் இருந்து July 27, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110727055459/http://articles.nydailynews.com/2011-03-02/entertainment/28666720_1_kim-kardashian-jam-reality. 
  71. "MovieWeb: "The Apprentice (2004–present): In-Store Display Challenge: Kim Kardashian Visits Octane"". MovieWeb.com. November 12, 2010. Archived from the original on July 18, 2011.
  72. "The Apprentice, Kim Kardashian's Perfume Brings Out Best and Worst". Gather.com. November 12, 2010. Archived from the original on July 11, 2011.
  73. "Kardashian Sisters Land 90210 Cameo". TVGuide.com. June 29, 2010. Archived from the original on November 3, 2014. Retrieved May 8, 2023.
  74. Brissey, Breia (November 15, 2011). "Kardashian's publish new novel 'Dollhouse'". Entertainment Weekly. Archived from the original on March 5, 2023. Retrieved May 8, 2023.
  75. Andreeva, Nellie (April 24, 2012). "'Keeping Up with the Kardashians' Renewed – E! Extends Series For Three More Seasons". Deadline Hollywood. Archived from the original on August 27, 2012. Retrieved August 9, 2012.
  76. "Kim Kardashian Perfume: True Reflection". People. August 29, 2011. Archived from the original on February 23, 2022. Retrieved February 23, 2022.
  77. "Kim Kardashian Releases Glam Fragrance". Style MTV. Archived from the original on June 5, 2013. Retrieved October 24, 2012.
  78. "Tyler Perry's Temptation: Confessions of a Marriage Counselor (2013) – Box Office Mojo". Archived from the original on September 30, 2018. Retrieved May 8, 2023.
  79. "Tyler Perry's Temptation: Confessions of a Marriage Counselor (2013) – Box Office Mojo". Archived from the original on September 30, 2018. Retrieved May 8, 2023.
  80. "Kim Kardashian wins Razzie award for 'Worst Supporting Actress' in Tyler Perry film [VIDEO] - UPI.com". UPI. Archived from the original on March 16, 2021. Retrieved June 22, 2023.
  81. Rothman, Michael (June 18, 2014). "Take a Sneak Peek at Kim Kardashian's New Video Game". ABC News. Disney Media Networks. Archived from the original on June 19, 2014. Retrieved June 19, 2014.
  82. 82.0 82.1 82.2 Wortham, Jenna (July 30, 2014). "Kim Kardashian, an Unlikely Mobile Video Game Hit". The New York Times. Archived from the original on August 6, 2014. Retrieved August 5, 2014.
  83. "Kim Kardashian 'American Dad': Reality Star to Play Alien on Comedy". Variety. Archived from the original on September 25, 2013. Retrieved September 25, 2013.
  84. Snierson, Dan (September 24, 2013). "Kim Kardashian to play alien on 'American Dad'". Entertainment Weekly. Archived from the original on October 27, 2014. Retrieved June 29, 2015.
  85. Muller, Marissa G. (November 12, 2014). "Meet The Man Behind Kim Kardashian's 'Break The Internet' Cover: Jean-Paul Goude". MTV News. Archived from the original on March 30, 2015. Retrieved March 23, 2015.
  86. Rothman, Michael (November 12, 2014). "Kim Kardashian Leaves Little to Imagination in Raciest Magazine Cover Yet". ABC News. Disney Media Networks. Archived from the original on November 12, 2014. Retrieved November 13, 2014.
  87. Fortini, Amanda (November 2014). "NO FILTER: An Afternoon With Kim Kardashian". Paper. Archived from the original on November 2, 2015. Retrieved November 14, 2014.
  88. Moylan, Brian (November 12, 2014). "Kim Kardashian's Butt Is an Empty Promise". Time. Archived from the original on July 8, 2015. Retrieved June 29, 2015.
  89. Van Grove, Jennifer. "Kim Kardashian Didn't Break the Internet, but She Did Set a New Benchmark" பரணிடப்பட்டது ஏப்ரல் 2, 2019 at the வந்தவழி இயந்திரம், The Street, November 17, 2014.
  90. Grossman, Samantha (December 2, 2014). "Top 10 Things That Broke the Internet". Time. Archived from the original on June 23, 2015. Retrieved June 7, 2015.
  91. Begley, Sarah (May 7, 2015). "Kim Kardashian's Selfish Is Anything But". Time. Archived from the original on July 10, 2015. Retrieved June 29, 2015.
  92. Biedenharn, Isabella (May 20, 2015). "Review Roundup: Critics love Kim Kardashian's Selfish". Entertainment Weekly. Archived from the original on March 15, 2016. Retrieved May 25, 2016.
  93. Brown, Kat (June 22, 2015). "Kim Kardashian's selfie book Selfish: unexpectedly revealing". The Telegraph. Archived from the original on April 1, 2016. Retrieved May 25, 2016.
  94. Kallor, Amber (July 23, 2015). "Kim Kardashian West's "Vogue España" Cover Shoot Inspires Us to Strip Down". Archived from the original on August 20, 2016. Retrieved July 19, 2016.
  95. 95.0 95.1 Link, Monica. "Kim Kardashian iOS Emoji App, 'Kimoji' Ranks Higher Than Grand Theft Auto". Idigital Times. Archived from the original on January 3, 2016. Retrieved January 1, 2016.
  96. "Instagram Influencer Price Kim Kardashian". YouTube. Ibriiz. Archived from the original on June 26, 2019. Retrieved May 8, 2019.
  97. Marine, Brooke (December 5, 2017). "Everything We Know About Kim Kardashian's New Beauty Competition Series". W. Archived from the original on December 6, 2017. Retrieved August 8, 2021.
  98. Chan, Stephanie (2017-12-05). "Laverne Cox to Host Lifetime's 'Glam Masters' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on July 12, 2023. Retrieved 2023-07-12.
  99. Nededog, Jethro (February 28, 2018). "Kim Kardashian's makeup artists are so famous that people are fighting to join her glam squad". Insider. Archived from the original on September 12, 2023. Retrieved 2023-07-12.
  100. Donahue, Rosemary (2018-04-23). "Kim Kardashian Launches KKW Beauty x Argenis Pinal Créme Color Sticks at Beautycon". Allure. Archived from the original on July 12, 2023. Retrieved 2023-07-12.
  101. Petit, Stephanie (January 17, 2017). "Kim Kardashian and Kendall Jenner will make cameos in Ocean's Eight". Entertainment Weekly. Archived from the original on January 18, 2017. Retrieved January 17, 2017.
  102. Evans, Greg (September 7, 2018). "Kim Kardashian West Prank Series 'You Kiddin' Me?!' Sets Premiere Date". Deadline Hollywood. Archived from the original on September 13, 2018. Retrieved September 13, 2018.
  103. Spangler, Todd (March 2, 2018). "Facebook Orders Kim Kardashian West's Celebrity Kid Prank Series, Produced by Lionsgate". Variety. Archived from the original on March 2, 2018. Retrieved March 2, 2018.
  104. Emmanuele, Julia (November 17, 2018). "Chrissy Teigen & John Legend's Christmas Special Guest List Will Give You Serious FOMO". Bustle. Archived from the original on July 13, 2023. Retrieved 27 November 2018.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya