அமோனியம் அயோடைடு
அமோனியம் அயோடைடு (Ammonium iodide) என்பது NH4I என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். இச்சேர்மம் ஒளிப்பட வேதியியல் மற்றும் மருந்தளிப்பு மருத்துவம்[1] போன்ற துறைகளில் பயன்படுகிறது. ஐதரயோடிக் அமிலத்துடன் அமோனியாவை வினைபுரியச் செய்து அமோனியம் அயோடைடைத் தயாரிக்கலாம். தண்ணிரில் இது எளிமையாகக் கரைந்து கனசதுரங்களாகப் படிகமாகிறது. எத்தனாலிலும் இது நன்கு கரைகிறது. ஈரக்காற்றில் இது மெதுவாக சிதைவடைந்து அயோடினை வெளியேற்றி மஞ்சளாக மாறுகிறது. அமோனியா அல்லது அமோனியம் ஐதராக்சைடுடன் ஐதரயோடிக் அமிலம் அல்லது ஐதரயோடிக் வாயுவைச் சேர்த்து வினைப்படுத்தி ஆய்வகங்களில் அமோனியம் அயோடைடு தயாரிக்கப்படுகிறது. NH3 + HI → NH4I NH4OH + HI → NH4I + H2O அமோனியமேற்றப்பட்ட நைட்ரசன் மூவயோடைடை (வெடி பொருள்) சிதைவுக்கு உட்படுத்தியும் அமோனியம் அயோடைடு தயாரிக்கலாம். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia