கிரிவலம் (திரைப்படம்)
கிரிவலம் (Girivalam) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திகில், நாடகத் திரைப்படம் ஆகும். சிவ்ராஜ் இயக்கிய இப்படத்தில் சாம், ரிச்சர்ட், ரோஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1] கதைஅர்ஜுன் ( ஷாம் ) ஒரு நடனக் குழுவின் தலைமைப் பொறுப்பில் உள்ளான். குழுவில் உள்ள நடனக் கலைஞர்களில் ஒருவரான பிரியா ( ரோஷினி ) அவரை காதலிக்கிறாள். இந்த நடனப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிபெற விரும்புகிறது குழு அவர்களின் நோக்கம் என்ன ஆனது என்பதே கதை. நடிகர்கள்
தயாரிப்புஇந்த படத்தை சிவ்ராஜ் இயக்கியுள்ளார், அவர் இதற்கு முன்பு அடிதடி (2004) என்ற படத்தையும் இரண்டாவதாக காதல் கிறுக்கன் (2003) படத்தையும் இயக்கினார்.[2] இது ஹம்ராஸ் (2002) என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். இப்படத்தில் சாம் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். இயற்கை (2003) படத்தில் அவர் நடிப்பதற்கு முன் இந்த படத்தில் சாம் நடித்தார்.[3] இசைஇப்படத்திற்கு தேவா இசையமைக்க, பாடல் வரிகளை பிறைசூடன், சினேகன், பா. விஜய் ஆகியோர் எழுதினர்.[4]
வெளியீடுஇப்படமானது குறைந்த செலவில் தயாரிக்கபட்ட படங்களான குருதேவா மற்றும் தகதிமிதா ஆகியவற்றுடன் வெளியான இப்படம் வணிகரீதியாக நல்ல வரவேற்பைப் பெறவில்லை.[5] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia