கிருஷ்ண வம்சி
பசுபுலேட்டி கிருஷ்ண வம்சி (Pasupuleti Krishna Vamsi) ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளரும், நடன இயக்குனருமாவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.[1][2] தொழில்1995இல் வெளியான "குலாபி" என்ற துப்பறியும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் ஜே. டி. சக்ரவர்த்தி நடித்திருந்தார். வம்சி இரண்டு தேசிய திரைப்பட விருதுகளையும், மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மூன்று நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். குலாபி படத்தில் இயக்குநராக அறிமுகமானதற்கு முன்பு ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 1996ஆம் ஆண்டில், அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றான நின்னி பெல்லாடுதா என்ற திரைப்படத்தை இயக்கினார். பின்னர் இவர் தனது தயாரிப்பு நிறுவனமான ஆந்திர டாக்கீஸின் கீழ் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட குற்றவியல் படமான சிந்தூரம் என்பதை இயக்கினார். இரண்டு படங்களும் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசியத் திரைப்பட விருதை வென்றன.[3][4] 2002ஆம் ஆண்டில், இவர், 1998இல் தெலுங்கு மொழியில் தான் இயக்கி வெளியான அந்தப்புரம் என்ற அதிரடித் திரைப்படத்தை சக்தி: தி பவர் என்ற பெயரில் பாலிவுட்டில் இயக்கினார். இவர், பாடலாசிரியர் சீதாராம சாஸ்திரியின் ரசிகர் என்று அறியப்படுகிறது. தான் இயக்கியிருந்த பல படங்களில் அவரது பாடல்களை இடம் பெறசெய்தார் . அவர் பாடல் எழுதிய படங்களில் நின்னி பெல்லாடுதா, குலாபி, சிந்தூரம், சந்திரலேகா, முராரி, கட்கம், சக்ரம், மகாத்மா, பைசா ஆகியவை அடங்கும் . சொந்த வாழ்க்கைகிருஷ்ண வம்சி தென்னிந்திய நடிகை ரம்யா கிருஷ்ணனை மணந்தார்.[5][6] ரம்யா கிருஷ்ணன் திருமணத்திற்கு முன் ஸ்ரீ ஆஞ்சநேயம் (சிறப்புத் தோற்றம்) மற்றும் சந்திரலேகா ஆகிய இவரது இரண்டு படங்களில் நடித்திருந்தார்.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia