கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி (ஆங்கிலம்: Christopher Markus and Stephen McFeely) என்பவர்கள் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் ஆவார்கள்.[1] இவர்கள் அமெரிக்கா நாட்டில் எல்லா நேரத்திலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிக வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளர்கள் இருந்துள்ளனர். இருவரும் நார்னியா என்ற திரைப்படத்தொடருக்கும் மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்சத்[2] திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), தோர்: த டார்க் வேர்ல்டு (2013), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியர்களாக பணிபுரிந்துள்ளனர்.[3] மற்றும் 'ஏஜென்ட் கார்ட்டர்' என்ற தொலைக்காட்ச்சி தொடரையும் தயாரித்து மற்றும் திரைக்கதை எழுதியுள்ளனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia